தேசிய செய்திகள்
கடந்த 3 ஆண்டுகளில் ராகிங் கொடுமைக்கு 51 மாணவர்கள் பலி
தேசிய செய்திகள்

கடந்த 3 ஆண்டுகளில் ராகிங் கொடுமைக்கு 51 மாணவர்கள் பலி

தினத்தந்தி
|
25 March 2025 7:27 AM IST

தேசிய அளவில் கடந்த 3 ஆண்டுகளில் ராகிங் கொடுமைக்கு 51 மாணவர்கள் பலியாகி உள்ளனர்.

புதுடெல்லி,

கல்விச் சமூகத்துக்கு எதிரான வன்முறை (சேவ்) என்ற அமைப்பு, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் நடைபெறும் ராகிங் கொடுமைகள் பற்றிய புள்ளி விவரங்களை சேகரித்து வெளியிடுகிறது. அவர்கள் தற்போது 2022 முதல் 2024-ம் ஆண்டு வரையான காலத்தில் கல்வி மையங்களில் நடந்த ராகிங் நிகழ்வுகள் குறித்து பட்டியலிட்டு உள்ளனர்.

அதில் தேசிய அளவில் ராகிங் கொடுமைக்கு எதிரான உதவி எண்ணில் 3 ஆயிரத்து 156 புகார்கள் பதிவாகி உள்ளன. அதில் 1,946 கல்லூரிகளின் பெயர்கள் இந்த புகாரில் சம்பந்தப்பட்டு உள்ளது. அவற்றில் பல கல்லூரிகள் மிகவும் பிரபலமான கல்வி மையங்களாகும். உதவி எண் அல்லாமல் கல்லூரி அளவில் இன்னும் அதிகமான புகார்கள் பதிவாகி இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பதிவான புகார்களில் மருத்துவ கல்லூரிகளில் 38.6 சதவீத ராகிங் நடந்ததாக தெரியவந்துள்ளது.

அவற்றில் 35.4 சதவீதம் தீவிர நடவடிக்கை புகார்களாகும். இந்த 3 ஆண்டுகளில் 51 மாணவ மாணவிகள் ராகிங் கொடுமைக்கு பலியாகி உள்ளனர். 1.1 சதவீத மாணவர்களே இந்த ராகிங் குற்றத்தில் பங்குபெற்று உள்ளனர். இது கோடா பயிற்சி மைய நகரில் தற்கொலை செய்து கொண்ட 57 மாணவர்கள் எண்ணிக்கைக்கு நிகராக உள்ளது குறிப்பிடத்தகக்து.

மேலும் செய்திகள்