< Back
தேசிய செய்திகள்
டெங்கு காய்ச்சலுக்கு 5 மாத பெண் குழந்தை உயிரிழப்பு
தேசிய செய்திகள்

டெங்கு காய்ச்சலுக்கு 5 மாத பெண் குழந்தை உயிரிழப்பு

தினத்தந்தி
|
19 July 2024 12:51 AM IST

டெங்கு காய்ச்சலுக்கு 5 மாத பெண் குழந்தை உயிரிழந்தது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்தநிலையில், தார்வார் மாவட்டம் மம்மிகட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோபால் லமாணி. இவர் தார்வார் டவுன் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.

கோபால் லமாணிக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஆராத்தியா என்ற 5 மாத பெண் குழந்தை உண்டு. இந்த குழந்தை கடந்த ஒரு வாரமாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வந்தாள். இதற்காக அவளுக்கு அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆராத்தியா சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தாள். குழந்தையின் உடலை பார்த்து பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர். இது காண்போரை கண் கலங்க செய்தது. டெங்கு காய்ச்சலுக்கு 5 மாத பெண் குழந்தை பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்