< Back
தேசிய செய்திகள்
வேன் - ஆட்டோ மோதி கோர விபத்து - 5 பேர் பலி
தேசிய செய்திகள்

வேன் - ஆட்டோ மோதி கோர விபத்து - 5 பேர் பலி

தினத்தந்தி
|
11 Nov 2024 8:37 PM IST

வேனும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

கவுகாத்தி,

அசாம் மாநிலம் கச்சார் மாவட்டம் போர்ஹலாவில் இன்று மதியம் ஆட்டோ சென்றுகொண்டிருந்தது. அந்த ஆட்டோவில் ஒரேகுடும்பத்தை சேர்ந்த 4 பேர் உள்பட 5 பேர் பயணித்தனர்.

ஆட்டோ ரனிஹட் பாலத்தில் பயணித்தபோது எதிரே வந்த வேன் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த கோர விபத்தில் ஆட்டோவில் பயணித்த 5 பேரும் உடல் நசுங்கி உயிரிழந்தனர். ஆட்டோ டிரைவர் படுகாயங்களுடன் உயிர் தப்பினார்.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், படுகாயமடைந்த ஆட்டோ டிரைவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்