< Back
தேசிய செய்திகள்
காசியாபாத்: வீட்டில் பயங்கர தீ விபத்து - 7 மாத குழந்தை உட்பட 5 பேர் உயிரிழப்பு
தேசிய செய்திகள்

காசியாபாத்: வீட்டில் பயங்கர தீ விபத்து - 7 மாத குழந்தை உட்பட 5 பேர் உயிரிழப்பு

தினத்தந்தி
|
13 Jun 2024 9:59 AM IST

காசியாபாத்தில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 மாத குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காசியாபாத்,

உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தில் உள்ள பெஹ்தா ஹாஜிபூர் கிராமத்தில் ஒரு வீட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஏழு மாத குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று இரவு லோனி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தரை தளத்தில் பற்றிய தீ வேகமாக மேல் மாடிக்கு பரவியது. வீட்டிலிருந்தவர்கள் தீ விபத்தில் சிக்கித் தவித்தனர். இந்த நிலையில் இதுகுறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில், 7 மாத குழந்தை, 7 வயது சிறுமி உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தை காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்