< Back
தேசிய செய்திகள்
மாவட்ட கோர்ட்டுகளில் 4.53 கோடி வழக்குகள் நிலுவை  - மத்திய மந்திரி தகவல்
தேசிய செய்திகள்

மாவட்ட கோர்ட்டுகளில் 4.53 கோடி வழக்குகள் நிலுவை - மத்திய மந்திரி தகவல்

தினத்தந்தி
|
28 Nov 2024 6:34 PM IST

மாவட்ட கோர்ட்டுகளில் 4.53 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக மத்திய சட்டத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சட்டத்துறை மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால் எழுத்துப்புர்வமாக அளித்த பதிலில், கடந்த ஜனவரி 1-ந்தேதி நிலவரப்படி, நாட்டில் உள்ள மாவட்ட கோர்ட்டுகள் மற்றும் துணை கோர்ட்டுகளில் 4.44 கோடி வழக்குகள் நிலுவையில் இருந்ததாகவும், கடந்த 11 மாதங்களில் சுமார் 9.22 லட்சம் வழக்குகள் அதிகரித்து, நவம்பர் 15-ந்தேதி நிலவரப்படி நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 4.53 கோடியாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதில் சிவில் வழக்குகள் 1.10 கோடி என்றும், கிரிமினல் வழக்குகள் 3.43 கோடி என்றும் அவர் கூறியுள்ளார். மொத்தமாக நாட்டில் உள்ள அனைத்து கோர்ட்டுகளிலும் நவம்பர் 21-ந்தேதி நிலவரப்படி 5.16 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக குறிப்பிட்டுள்ள அர்ஜுன் ராம் மேக்வால், மாவட்ட கோர்ட்டுகள் மற்றும் துணை கோர்ட்டுகளில் 5,245 நீதித்துறை அதிகாரிகளின் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்