சபரிமலையில் இதுவரை 40 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் - திருவிதாங்கூர் தேவஸ்தானம் தகவல்
|சன்னிதானம் 24 மணி நேரமும் பக்தர்களால் நிரம்பி வழிகிறது.
சபரிமலை,
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி கடந்த நவம்பர் 16-ந்தேதி (கார்த்திகை 1) முதல் சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. டிசம்பர் 26-ந்தேதி மண்டல சீசன் நிறைவு பெற்றது. மண்டல சீசனில் மட்டும் 41 நாட்களில் 32.49 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்திருந்தனர்.
இந்தநிலையில் மகரவிளக்கு சீசனையொட்டி சபரிமலையில் தினசரி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். டிசம்பர் 31-ந்தேதி முதல் தினசரி 1 லட்சம் பக்தர்கள் சராசரியாக தரிசனம் செய்து வருகிறார்கள்.
அதைதொடர்ந்து மண்டல சீசன் முதல் கடந்த 49 நாட்களில் சபரிமலையில் சாமி தரிசனம் செய்தவர்களின் எண்ணிக்கை 40 லட்சத்தை நெருங்கி உள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதனால் சன்னிதானம் 24 மணி நேரமும் பக்தர்களால் நிரம்பி வழிகிறது. கூட்ட நெரிசல் காரணமாக சாமி தரிசனம் செய்ய 8 முதல் 10 மணிநேரம் வரை நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதாக பக்தர்கள் தெரிவித்தனர்.