< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை: காயம் அடைந்த 4 ராணுவ வீரர்கள் வீர மரணம்
|16 July 2024 8:10 AM IST
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கி சண்டையில் காயம் அடைந்த 4 ராணுவ வீரர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் நேற்று பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் அங்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது தேசா என்ற பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். உடனே சுதாரித்துக் கொண்ட பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே நீடித்த இந்த துப்பாக்கி சண்டையில் அதிகாரி உள்பட 4 வீரர்கள் காயம் அடைந்தனர்.
காயம் அடைந்த வீரர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், சிகிச்சை பலனின்றி ராணுவ வீரர்கள் 4 பேரும் வீர மரணம் அடைந்தனர்.