< Back
தேசிய செய்திகள்
உத்தரகாண்டில் மலையேற்றத்தில் சிக்கித் தவித்த வெளிநாட்டினர் 4 பேர் மீட்பு
தேசிய செய்திகள்

உத்தரகாண்டில் மலையேற்றத்தில் சிக்கித் தவித்த வெளிநாட்டினர் 4 பேர் மீட்பு

தினத்தந்தி
|
10 Oct 2024 4:01 AM IST

மலையேற்றத்தின்போது 4 பேர் சிக்கித்தவிப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் உள்ள நீல்கந்த் மலையேற்ற தளத்தில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சிலர் மலையேற்றத்தில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் இரவில் மலையேற்றத்தின்போது அவர்கள் சிக்கித் தவிப்பதாக, போலீசாருக்கு தகவல் அனுப்பினர். இதையடுத்து அவர்களை தேடும்பணியில் மீட்புக்குழு இறங்கியது. நேற்று காலையில் அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்களில் 3 பேர் பிரேசில் நாட்டை சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. மீட்கப்பட்ட அவர்கள் பத்ரிநாத் புறப்பட்டு சென்றனர்.

மேலும் செய்திகள்