< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்

மேற்கு வங்காளத்தில் எக்ஸ்பிரஸ் ரெயிலின் 3 பெட்டிகள் தடம்புரண்டு விபத்து

தினத்தந்தி
|
9 Nov 2024 8:42 AM IST

மேற்கு வங்காளத்தில் எக்ஸ்பிரஸ் ரெயிலின் 3 பெட்டிகள் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது.

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் உள்ள நல்புர் ரெயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த செகந்தராபாத்-சலிமார் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று தடம்புரண்டு விபத்திற்குள்ளானது. இதில் ஒரு பார்சல் பெட்டி உள்பட 3 பெட்டிகள் தடம்புரண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

விபத்து குறித்து தகவல் அறிந்து ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தடம்புரண்ட ரெயில் பெட்டிகளை மீட்கும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்