< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
டெல்லியில் குடித்துவிட்டு வந்த கணவனின் அந்தரங்க உறுப்பை அறுத்த 3-வது மனைவி
|3 Nov 2024 9:54 PM IST
டெல்லியில் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த கணவனின் அந்தரங்க உறுப்பை மனைவி அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுடெல்லி,
டெல்லியின் சக்தி நகர் பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் உதவியாளராக பீகாரைச் சேர்ந்த நபர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் தனது 3-வது மனைவியுடன் டெல்லிக்கு வந்துள்ளார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ள நிலையில், கடந்த 31-ந்தேதி இரவு மது அருந்திவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அப்போது வீட்டில் இருந்த மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த மனைவி, அந்த நபரின் அந்தரங்க உறுப்பை அறுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அந்த நபரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். காயமடைந்த நபரிடம் வாக்குமூலத்தை பதிவு செய்த போலீசார், தற்போது தலைமறைவாக உள்ள அவரது 3-வது மனைவியை திவிரமாக தேடி வருகின்றனர்.