< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து - 36 பேர் பலி
|4 Nov 2024 11:37 AM IST
பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 36 பேர் உயிரிழந்தனர்.
டேராடூன்,
உத்தரகாண்ட் மாநிலம் கர்வால் மாவட்டத்தில் இருந்து குமான் மாவட்டத்திற்கு இன்று காலை பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 40 பேர் பயணித்தனர்.
அல்மொரா மாவட்டம் மர்சுலா கிராமத்தில் மலைப்பாங்கான பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் 36 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், தீயணைப்புத்துறையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.