< Back
தேசிய செய்திகள்
சிக்கிமில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு
தேசிய செய்திகள்

சிக்கிமில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு

தினத்தந்தி
|
12 Nov 2024 6:47 PM IST

சிக்கிமில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

காங்டோக்,

வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அம்மாநிலத்தின் தலைநகர் காங்டோக்கில் இருந்து மேற்கே 16 கிலோமீட்டர் தொலைவை மையமாக கொண்டு இன்று மதியம் 2 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. அதேபோல், நிலநடுக்கத்தின் தாக்கம் சிறிய அளவில் இருந்ததால் பொருள் இழப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்