< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ஆட்டோ மீது லாரி மோதி விபத்து - 3 பேர் பலி
|22 Nov 2024 3:11 AM IST
ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் புலந்த்சாகர் மாவட்டத்தில் நடைபெற்ற மத வழிபாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு 3 பெண்கள் உள்பட 7 பேர் நேற்று ஆட்டோவில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.
அம்மாவட்டத்தின் கண்ட்வால் பனாரஸ் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது சாலையில் வேகமாக வந்த லாரி ஆட்டோ மீது விபத்துக்குள்ளானது.
இந்த ஆட்டோவில் பயணித்த 3 பெண்கள் உடல்நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதேவேளை, விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.