< Back
தேசிய செய்திகள்
புனேவில் தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்ததில் 3 தொழிலாளர்கள் பலி
தேசிய செய்திகள்

புனேவில் தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்ததில் 3 தொழிலாளர்கள் பலி

தினத்தந்தி
|
24 Oct 2024 12:18 PM IST

புனேவில் தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்ததில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 7 பேர் காயமடைந்தனர்.

புனே,

மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்தின் பிம்பிரி சிஞ்ச்வாட் டவுன்ஷிப்பின் போசாரி பகுதியில் தொழிலாளர் முகாம் உள்ளது. அந்த முகாமில் இன்று காலை தற்காலிக தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்தது.

இந்த விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர் மற்றும் 7 பேர் காயமடைந்தனர். இந்த தொழிலாளர்கள் அந்த தண்ணீர் தொட்டியின் கீழ் குளித்து கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து, காயமடைந்தவர்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் பற்றி பிம்பிரி சிஞ்ச்வாட்டின் கூடுதல் போலீஸ் கமிஷனர் வசந்த் பர்தேஷி கூறுகையில், "தண்ணீர் அழுத்தத்தின் காரணமாக தண்ணீர் தொட்டியின் சுவர் வெடித்து, தொட்டி இடிந்து விழுந்தது. தண்ணீர் தொட்டிக்கு கீழே இருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். அவர்களில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 7 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்" என்றார்.

மேலும் செய்திகள்