< Back
தேசிய செய்திகள்
மத்திய பிரதேசம்: மின் கம்பத்தில் பைக் மோதியதில் 3 பேர் பலி
தேசிய செய்திகள்

மத்திய பிரதேசம்: மின் கம்பத்தில் பைக் மோதியதில் 3 பேர் பலி

தினத்தந்தி
|
3 Dec 2024 1:12 PM IST

மின் கம்பத்தில் பைக் மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

போபால்,

மத்திய பிரதேச மாநிலம் சிங்ராலி மாவட்டத்தில் உள்ள மின் கம்பத்தில் பைக் மோதியதில் 3 பேர் உயிரிழந்ததாக போலீசார் இன்று தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் உடல்களை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் மாவட்ட தலைமையகத்திலிருந்து 55 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சரோந்தா கிராமத்திற்கு அருகே நேற்று இரவு 8 மணியளவில் நடந்ததாக ஜியாவான் காவல் நிலையப் பொறுப்பாளர் ராஜேந்திர பதக் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், "பைக் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதியது. இதில் பைக் ஓட்டி சென்றவர் மற்றும் பின்னால் பயணித்த மேலும் இருவர் என 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இறந்தவர்கள் தாதுலால் கோல் (31), சிதாசரண் கோல் (30) மற்றும் ராம்பிரகாஷ் கோல் (30) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்" என்றார்.

மேலும் செய்திகள்