< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மிசோரத்தில் நிலச்சரிவு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி
|2 July 2024 11:47 AM IST
மிசோரத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர்.
ஐஸ்வால்,
மிரோரமில் நேற்று முதல் கனமழை காரணமாக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கணிசமான சேதம் ஏற்பட்டுள்ளது. கனமழை காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த கனமழை காரணமாக ஐஸ்வாலின் வடக்கு புறநகரில் உள்ள ஜுவாங்டுய் பகுதியில் உள்ள 3 கட்டிடங்கள் மற்றும் பாவ்ங்காவ்ன் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்திலும் இன்று அதிகாலை திடீர் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் கட்டிடங்கள் மண்ணுக்குள் புதைந்தது. இதில் சில குடும்ப உறுப்பினர்கள் தப்பியோடிய நிலையில், ஒரு தம்பதியினரும் அவர்களது 4 வயது மகளும் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மண்ணில் புதையுண்ட அந்த 3 நபர்களின் உடலை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.