< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
பீகாரில் கங்கை ஆற்றில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி
|6 Nov 2024 6:09 AM IST
சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்ட வந்த அக்கம்பக்கத்தினர் 3 சிறுவர்களை போராடி மீட்டனர்.
பாட்னா,
பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள பாடி மோகன்பூர் பகுதியில் சாத் பூஜையையொட்டி பக்தர்கள் நீராடுவதற்காக கங்கை ஆற்றில் சிறப்பு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. இதை வேடிக்கை பார்ப்பதற்காக சிறுவர்கள் பலர் குவிந்தனர்.
அவர்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 சிறுவர்கள் கவனக்குறைவாக ஆற்றில் இறங்கினர். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற சிறுவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்ட வந்த அக்கம்பக்கத்தினர் 3 சிறுவர்களை போராடி மீட்டனர். எனினும் மற்ற 3 சிறுவர்களும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.