< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
காரைக்கால் மாவட்டத்திற்கு 21ம் தேதி உள்ளூர் விடுமுறை
|18 Jun 2024 4:27 PM IST
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
காரைக்கால்.
புதுச்சேரி முதல்-மந்திரி அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,
ஆண்டுதோறும் காரைக்காலில் நடைபெறும் பிரசித்தி பெற்ற மாங்கனித் திருவிழா இந்த ஆண்டு 21ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு உள்ளூர் பொது விடுமுறை அளிக்க புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமியிடம் , அமைச்சர் திருமுருகன் கோரிக்கை வைத்தார்.
அமைச்சர் அவர்களின் கோரிக்கையை ஏற்று 21ம் தேதி காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு உள்ளூர் பொது விடுமுறை அளிக்க முதல்-மந்திரி ரங்கசாமி காரைக்கால் மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டுள்ளார். என தெரிவிக்கப்பட்டுள்ளது.