< Back
தேசிய செய்திகள்
நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

தினத்தந்தி
|
29 Oct 2024 12:09 PM IST

நடிகர் சல்மான் கான் மற்றும் ஜீஷன் சித்திக் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்த 20 வயது வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பை,

நடிகர் சல்மான் கான் மற்றும் கொலை செய்யப்பட்ட அரசியல்வாதி பாபா சித்திக்யின் மகன் ஜீஷன் சித்திக் ஆகியோருக்கு மிரட்டல் அழைப்பு விடுத்ததாக 20 வயது நபர் நொய்டாவில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

நொய்டாவின் செக்டார் 39-ல் இருந்து மிரட்டல் விடுத்த முகமது தையப் என்பவரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்திய நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

இதுதொடர்பாக மும்பை போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், "கடந்த வெள்ளிக்கிழமை மாலை பந்த்ராவில் உள்ள ஜீஷன் சித்திக் அலுவலகத்திற்கு, தாங்கள் கேட்கும் பணம் தரவில்லை என்றால் ஜீஷன் சித்திக், சல்மான் கான் ஆகியோர் கொலை செய்யப்படுவார்கள் என மிரட்டல் வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து அலுவலகத்தில் உள்ள ஊழியர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் மும்பை போலீசார் நிர்மல்நகர் காவல் நிலையத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். பின்னர் மிரட்டல் விடுத்த நபர் முகமது தையப் என்று போலீசார் கண்டுபிடித்தனர்" என்று தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்