< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
சத்தீஷ்கார்: சரக்கு ரெயிலின் 20 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து
|26 Nov 2024 4:56 PM IST
சத்தீஷ்காரில் சரக்கு ரெயிலின் 20 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
ராய்ப்பூர்,
சத்தீஷ்கார் மாநிலம் பிலஸ்பூர் மாவட்டத்தில் இருந்து கட்னி நகருக்கு நிலக்கரி ஏற்றிக்கொண்டு இன்று காலை சரக்கு ரெயில் சென்றுகொண்டிருந்தது.
காலை 11.11 மணியளவில் ஹங்சரா - பன்வட்ரங்க் இடையே சென்றுகொண்டிருந்தபோது திடீரென சரக்கு ரெயிலின் 20 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தால் பிலஸ்பூர், கட்னி இடையேயான பயணிகள் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.