< Back
தேசிய செய்திகள்
காஷ்மீரில் வாகன விபத்து;  3 ராணுவ வீரர்கள் பலி
தேசிய செய்திகள்

காஷ்மீரில் வாகன விபத்து; 3 ராணுவ வீரர்கள் பலி

தினத்தந்தி
|
4 Jan 2025 5:21 PM IST

2 வீரர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஸ்ரீநகர்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திப்போரா மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் இன்று ராணுவ வாகனம் ஒன்று சென்றுகொண்டிருந்தது. எஸ்.கே.பயீன் பகுதிக்கு அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் எதிர்பாராத விதமாக சாலை அருகில் உள்ள ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் வாகனத்தில் இருந்த 5 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். உடனே அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே 2 வீரர்கள் உயிரிழந்தனர் .

காயமடைந்த 3 ராணுவ வீரர்கள் பின்னர் மேல்சிகிச்சைக்காக ஸ்ரீநகர் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இதனிடையே சிகிச்சை பலனின்றி ஒரு வீரர் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 2 வீரர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்