< Back
தேசிய செய்திகள்
ஓட்டல் கட்டுமான பணியின்போது மேற்கூரை இடிந்து விபத்து - 2 பேர் பலி
தேசிய செய்திகள்

ஓட்டல் கட்டுமான பணியின்போது மேற்கூரை இடிந்து விபத்து - 2 பேர் பலி

தினத்தந்தி
|
5 April 2025 9:31 PM IST

ஓட்டல் கட்டுமான பணியின்போது மேற்கூரை இடிந்து விழுந்து 2 பேர் உயிரிழந்தனர்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவின் விகாஸ் நகர் பகுதியில் ஓட்டல் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இன்று கட்டுமான பணியில் வழக்கம்போல் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், கட்டுமான பணியின்போது இன்று திடீரென ஓட்டல் மேற்கூரை இடிந்து விழுந்தது. மேலும், அருகில் இருந்த கட்டிடங்களும் இடிந்தன. இந்த சம்பவத்தில் 10க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.

தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும், இந்த விபத்தில் 2 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 7 பேர் இடிபாடுகளுக்கு சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்