< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
நாக்பூரில் எக்ஸ்பிரஸ் ரெயிலின் 2 பெட்டிகள் தடம்புரண்டு விபத்து
|22 Oct 2024 6:44 PM IST
நாக்பூரில் ஷாலிமார் எக்ஸ்பிரஸ் ரெயிலின் 2 பெட்டிகள் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது.
மும்பை,
மராட்டிய மாநிலம் மும்பையில் இருந்து கொல்கத்தா நோக்கி சென்று கொண்டிருந்த ஷாலிமார் குர்லா எக்ஸ்பிரஸ் ரெயில், நாக்பூர் அருகே கலம்னா வழித்தடத்தில் சென்றபோது, ரெயிலின் பார்சல் பெட்டி மற்றும் ஒரு பயணிகள் பெட்டி ஆகிய 2 பெட்டிகள் தடம்புரண்டன.
இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து தகவலறிந்து ரெயில்வே அதிகாரிகள் சுமார் 5 நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தடம்புரண்ட பெட்டிகளை மீட்கும் பணிகளை மேற்கொண்டனர். இந்த சம்பவத்தால் கலம்னா-இத்வாரி வழித்தடத்தில் சிறிது நேரம் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.