< Back
தேசிய செய்திகள்
பீகார் சாலை விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் பலி
தேசிய செய்திகள்

பீகார் சாலை விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் பலி

தினத்தந்தி
|
23 Dec 2024 2:01 PM IST

பீகாரில் நடந்த சாலை விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாட்னா,

பீகார் மாநிலம் பூர்னியா மாவட்டத்தின் தம்தாஹா பகுதியில் வேகமாக வந்த பிக்-அப் வாகனம் ஒன்று அங்கு சென்று கொண்டிருந்தவர்கள் மீது அதிபயங்கரமாக மோதியது. இதில் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர் மற்றும் 8 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "டோக்வா கிராமத்தில் நேற்று இரவு 8 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தை ஏற்படுத்திய பிக்-அப் வாகனத்தின் டிரைவர் வாகனத்துடன் தப்பியோடியதாகவும் அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் ஜோதிஷ் தாக்கூர் (50), சன்யுக்தா தேவி (45), அகிலேஷ் (11), அமர்தீப் (6) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மற்றவர்களின் அடையாளத்தை கண்டறியும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்" என்றார்.

மேலும் செய்திகள்