< Back
தேசிய செய்திகள்
மராட்டியம்: மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கி தருவதாக ரூ.4.6 லட்சம் மோசடி
தேசிய செய்திகள்

மராட்டியம்: மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கி தருவதாக ரூ.4.6 லட்சம் மோசடி

தினத்தந்தி
|
17 Feb 2025 12:29 PM IST

கல்லூரில் இடம் கிடைத்து விட்டது உடனடியாக ரூ. 5 லட்சத்தை கட்டினால் இணைந்து விடலாம் என நம்பவைத்தர்.

தானே,

மராட்டிய மாநிலம் தானேவை சேர்ந்தவர் பாய்சாஹோப் ஜாதவ். இவர் தனது உதவியாளர் ஜெயந்த் ஜாதவுடன் அப்பகுதியை சேர்ந்த ஒருவரை சந்திக்க சென்றார். அங்கு அவரிடம் தங்களது மகனுகு புகழ்பெற்ற ஒரு மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கி தருவதாக கூறினார். அவரும் மகன் நல்ல மருத்துவக் கல்லூரியில் படிக்கப்போகிறார் என நம்பினார்.

பின்னர் அவரிடம் உங்கள் மகனுக்கு கல்லூரில் இடம் கிடைத்து விட்டது உடனடியாக ரூ. 5 லட்சத்தை கட்டினால் இணைந்து விடலாம் என நம்பவைத்தர். இதை நம்பிய பாதிக்கப்பட்டவர் பணத்தை அவரிடம் கொடுத்தார். உங்கள் மகன் கல்லூரியில் சேர்க்கப்பட்டான் என முழுமையாக அவரை நம்பவைத்தனர்.

இருப்பினும் பாதிக்கப்பட்டவருக்கு உண்மை தெரியவந்தது. இதனால் அவர்களை சந்தித்து தனது பணத்தை திருப்பிக்கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் ரூ. 40 ஆயிரம் மட்டும் திருப்பி கொடுத்துவிட்டு கொலை செய்து விடுவோம் என மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பாதிக்கப்பட்டவர் மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கி தருவதாகக்கூறி ரூ.4.6 லட்சம் மோசடி செய்தனர் என போலீசில் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்