கர்நாடகாவில் நடந்த கோர விபத்து: 2 குழந்தைகள் உள்பட 13 பேர் பரிதாப பலி
|சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஹாவேரி,
புனே-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் குண்டேனஹள்ளி கிராஸ் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது டெம்போ வேன் மோதியதில் இரண்டு குழந்தைகள் உட்பட 13 பேர் இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தனர். குலதெய்வ வழிபாட்டுக்கு சென்று திரும்பியபோது இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்த கோர விபத்தில் சிக்கி பரசுராம் (45), பாக்யா (40), நாகேஷ் (50), விசாலாட்சி (50), சுபத்ரா பாய் (65), புண்யா (50), மஞ்சுளா பாய் (57), ஆதர்ஷ் (23, ஓட்டுநர்), மானசா (24), ரூபா (40), மஞ்சுளா (50), 4 வயது குழந்தை (பெயர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை), 6 வயது குழந்தை (பெயர் கண்டுபிடிக்கப்படவில்லை) ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கிய உடல்களை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
வேனில் சென்ற மேலும் 3 பேர் காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.