< Back
தேசிய செய்திகள்
தெலுங்கானாவில் 12 வயது சிறுமிக்கு திடீர் மாரடைப்பு
தேசிய செய்திகள்

தெலுங்கானாவில் 12 வயது சிறுமிக்கு திடீர் மாரடைப்பு

தினத்தந்தி
|
17 Nov 2024 12:06 AM IST

பள்ளி செல்வதற்கு முன் வீட்டிலேயே சிறுமி திடீரென மயங்கி விழுந்தார்.

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம், மஞ்சேரியல்,சென்னூர், பத்மா நகரை சேர்ந்தவர் சீனிவாஸ். இவரது மகள் கஸ்தூரி நிவ்ருதி(வயது12). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை சிறுமி பள்ளி செல்வதற்காக குளித்து விட்டு ஆடையை மாற்றிக்கொண்டிருந்தார்.

அப்போது திடீரென சிறுமி மயங்கி கீழே விழுந்தார். இதனை கண்ட அவரது பெற்றோர் மகளை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் மாரடைப்பால் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை கேட்டு அதிச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் கதறி அழுதனர். 12 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்