< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ஜம்மு காஷ்மீர்: பள்ளத்தாக்கில் வாகனம் விழுந்த விபத்தில் 12 சி.ஆர்.பி.எப். வீரர்கள் காயம்
|17 Oct 2024 4:10 PM IST
பள்ளத்தாக்கில் வாகனம் விழுந்ததில் 12சி.ஆர்.பி.எப். வீரர்கள் காயமடைந்தனர்.
ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீரின் புத்காம் மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப். வீரர்களை ஏற்றிக்கொண்டு ராணுவ வாகனம் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது சாலையோரம் இருந்த பள்ளத்தாக்கில் எதிர்பாராதவிதமாக வாகனம் விழுந்து விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் 12 சி.ஆர்.பி.எப். வீரர்கள் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். மாவட்டத்தில் உள்ள கைகாம் பகுதியில் இந்த விபத்து நடந்ததாக தெரிவித்துள்ள அதிகாரிகள், இது குறித்து விசாரித்து வருகின்றனர்.