< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
இளம்பெண்ணை கட்டாய திருமணம் செய்ய வற்புறுத்தல்; 12 பேர் மீது வழக்குப்பதிவு
|27 Dec 2024 12:45 PM IST
இளம்பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பை,
மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் 18 வயதான இளம்பெண்ணை கட்டாயப்படுத்தி திருமணம் செய்ய வற்புறுத்தியதாக 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்களில் 7 பேர்களின் அடையாளம் தெரியவந்துள்ளது என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இளம்பெண் அளித்த புகாரில், முதலில் உறவினர்கள் தன்னை குஜராத்தில் உள்ள நவ்சாரி பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு அழைத்து சென்றனர். பின்னர் உத்தரபிரதேசத்தில் உள்ள காஜியாபாத்தில் உள்ள உறவினரின் இடத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது தன்னுடைய உறவினர்கள் சிலர் தன்னை வலுக்கட்டாயமாக அங்கிருந்த ஒரு நபருடன் திருமணம் செய்து வைத்ததாகவும், அதற்காக தன்னை வற்புறுத்தியதாகவும் தெரிவித்திருந்தார். இளம்பெண் அளித்த புகாரின் பேரில் 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.