< Back
தேசிய செய்திகள்
உ.பி.யில் 11-வது வந்தே பாரத் ரெயில்: நாளை மறுநாள் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
தேசிய செய்திகள்

உ.பி.யில் 11-வது வந்தே பாரத் ரெயில்: நாளை மறுநாள் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

தினத்தந்தி
|
29 Aug 2024 6:57 PM IST

சென்னை- நாகர்கோவில், பெங்களூரு-மதுரை வந்தே பாரத் விரைவு ரெயில்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

புதுடெல்லி,

மீரட்- லக்னோவை இணைக்கும் வந்தே பாரத் அதிவிரைவு ரெயிலை நாளை மறுநாள் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இந்த ரெயில் மீரட் நகரிலிருந்து காலை 6.35 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 1.45 மணியளவில் லக்னோவை சென்றடையும். மொராதாபாத் மற்றும் பரேலி சந்திப்புகளில் ஐந்து நிமிடங்கள் நின்றுச் செல்லும்.

பாட்னா-கோமதிநகர், வாரணாசி-டெல்லி, வாரணாசி-ராஞ்சி, லக்னோ, டேராடூன், ஆனந்த் விஹார்-அயோத்தி, ஆனந்த் விஹார்-டேராடூன், கோரக்பூர்-பிரயாக்ராஜ் மற்றும் ஹஸ்ரத் நிஜாமுதீன்-ஹபீப்கஞ்ச் ஆகிய 10 வந்தே பாரத் ரெயில்கள் உ.பி.யில் ஏற்கனவே இயக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே உத்தரப் பிரதேசத்தில் வந்தே பாரத் அதிவிரைவு ரெயில்களின் எண்ணிக்கை 11 ஆக உயர உள்ளது.

மீரட்- லக்னோ தவிர சென்னை-நாகர்கோவில் மற்றும் பெங்களூரு-மதுரை வந்தே பாரத் விரைவு ரெயில்களையும் பிரதமர் மோடி டெல்லியில் இருந்தவாறு இந்த 2 ரெயில்களையும் காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைக்க உள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். வந்தே பாரத் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பயணிகளின் வசதியை மேம்படுத்தும் நோக்கில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டதாகும்.

மேலும் செய்திகள்