இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்ற பட்டாசுகள்: திடீரென வெடித்து சிதறியதில் ஒருவர் பலி
|இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்ற பட்டாசுகள் வெடித்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்.
ஐதராபாத்,
ஆந்திர மாநிலம் ஏலூர் மாவட்டத்தில் பட்டாசு வெடித்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானார். மேலும் 6 பேர் காயமடைந்தனர்.
முன்னதாக இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர், தீபாவளி பண்டிகைக்கான பிரத்யேக பட்டாசுகள் மற்றும் வெங்காய வெடிகளை ஏற்றிச் சென்றபோது, அப்பகுதி கோவில் அருகே இருந்த பள்ளத்தில் இரு சக்கர வாகன இறங்கியதில் அதில் இருந்து வெடிகள் வெடித்துச் சிதறியது.
இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளில் இரண்டு ஆண்கள் வெள்ளை நிற ஸ்கூட்டரில் ஒரு குறுகிய தெரு வழியாக வேகமால செல்வதை காட்டியது. ஒரு முக்கிய சாலையை சந்திக்கும் இடத்தில் இரு சக்கர வாகனம் வெடித்தது. அந்த தெருவின் சந்திப்பில் நின்று கொண்டிருந்த 5 பேர் கொண்ட ஒரு சிறிய குழு இருந்தது. அந்த குழுவும் இந்த வெடிவிபத்தில் சிக்கிக்கொண்டது.
அதில் வாகனத்தை ஓட்டிச் சென்ற துர்காசி சுதாகர் என்பவர் உடல் சிதறி உயிரிழந்த நிலையில், மேலும் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.