மதுரையில் இளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறை - தமிழக அரசு அறிவிப்பு வெளியீடு
|மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் இளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறை நடைபெற உள்ளது.
சென்னை,
மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் 15.12.2024 முதல் 21.12.2024 வரை இளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறை நடைபெற உள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
"தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பெறும் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெறும் 200 மாணாக்கர்களுக்கு இளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறை ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வரிசையில், இந்த ஆண்டு தென்னகத்தின் தொன்னகரும் தேமதுரத் தமிழ்விளங்கும் பொன்னகரும் ஆகிப் புகழ்பூத்துக் குலுங்கும் நான்மாடக் கூடலில், இளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறையின் எழுச்சிமிகு விழா மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் 15.12.2024 முதல் 21.12.2024 வரை நடைபெறவுள்ளது.
இப்பயிற்சியில் கல்லூரி மாணவர்களிடையே முதல் நாளில் "இயல் இசை அன்றும் இன்றும்" என்ற தலைப்பில் முனைவர் ஞா.கற்பகம் அவர்களும், "எண்ணிய எண்ணியாங்கு எய்துப" என்ற தலைப்பில் த.ஸ்டாலின் குணசேகரன் அவர்களும், "தொல்காப்பியம் கூறும் புறத்திணை வாழ்வியல்" என்ற தலைப்பில் முனைவர் மெய்ஞானி பிரபாகரபாபு அவர்களும், "சங்கத்தமிழ் சுட்டும் விழுமியங்கள்" என்ற தலைப்பில் பேராசிரியர் சி.ஆர்.மஞ்சுளா அவர்களும், "நெய்தல் காட்டும் வாழ்வியல்" என்ற தலைப்பில் குறும்பனை சி.பெர்லின் அவர்களும், "சங்க கால வரலாற்றில் சூது பவள மணிகள்" என்ற தலைப்பில் முனைவர் ஜ.வள்ளி அவர்களும்,
இரண்டாம் நாளில் "தமிழ் மென்பொருள் பயன்பாடுகள்" என்ற தலைப்பில் முனைவர் துரை மணிகண்டன் அவர்களும், "அற்றம் காக்கும் கருவி" என்ற தலைப்பில் ச.கார்த்திகை செல்வன் அவர்களும், "தமிழ் சட்டமும் பேசும்" என்ற தலைப்பில் வழக்கறிஞர் பால சீனிவாசன் அவர்களும், "குன்றென நிமிர்" என்ற தலைப்பில் நித்யா செல்வகுமார் அவர்களும், "நடிகர் திலகமும் செந்தமிழும்" என்ற தலைப்பில் ஆலங்குடி வெள்ளைச்சாமி அவர்களும், "நோக்கரிய நோக்கே" என்ற தலைப்பில் இயக்குநர் ஜெ.எஸ்.சந்தானம் அவர்களும்,
மூன்றாம் நாளில் "மொழிபெயர்ப்பு தேவைகள்" என்ற தலைப்பில் நா.முருகேச பாண்டியன் அவர்களும், "நூலினைப் பகுத்துணர்" என்ற தலைப்பில் ஜோ.அருள் பிரகாஷ் அவர்களும், "மக்கள் திலகத்தின் மாண்புகள்" என்ற தலைப்பில் கலைமாமணி மணவை பொன்மாணிக்கம் அவர்களும், "21 ஆம் நூற்றாண்டில் பெரியபுராணம்" என்ற தலைப்பில் இலால்குடி பா.எழில்செல்வன் அவர்களும், "தொல் தமிழரின் அற வாழ்வியல்" என்ற தலைப்பில் சித்ரா கணபதி அவர்களும் "மானுடம் போற்றுதும்" என்ற தலைப்பில் சீ.ரேவதி அவர்களும்,
நான்காம் நாளில் "தமிழ்த்தொண்டன் பாரதி" என்ற தலைப்பில் இலக்கியச் சுடர் த.இராமலிங்கம் அவர்களும், "கம்பன் எனக்கு காதலன்" என்ற தலைப்பில் ஆசிரியர் கோ.மணி அவர்களும், "நா மணக்கும் நாலாயிரம்" என்ற தலைப்பில் பல்கலைவித்தகி ரேகா மணி அவர்களும், "தமிழோடு உரையாடுவோம்" என்ற தலைப்பில் இலக்கியச் சிம்மம் கங்கை மணிமாறன் அவர்களும், "இன்பத்துள் இன்பம் தமிழ்" என்ற தலைப்பில் சிந்தனைச் செல்வி அனுக்கிரகா ஆதிபகவன் அவர்களும், "பாட்டினில் அன்பு செய்" என்ற தலைப்பில் கவிஞர் கு.இரா.தரண் அவர்களும்,
ஐந்தாம் நாளில் "பூமி இழந்திடேல்" என்ற தலைப்பில் ஹேமா ராகேஷ் அவர்களும், "சங்க இலக்கியத்தில் கவித்துவம்" என்ற தலைப்பில் பேராசிரியர் சிவகாசி ராமச்சந்திரன் அவர்களும், "நடுகல் மரபு தோற்றமும் வளர்ச்சியும்" என்ற தலைப்பில் வே.பார்த்திபன் அவர்களும், "தெய்வம் நீ என்று உணர்!" என்ற தலைப்பில் பேராசிரியர் இராம மாணிக்கவாசகன் அவர்களும், "இலக்கியத்தில் அறிவியல்" என்ற தலைப்பில் லெனின் காந்தி அவர்களும், தந்தனத்தோம் வில்லுப்பாட்டு" என்ற தலைப்பில் கலைமாமணி பாரதி திருமகன் அவர்களும்,
ஆறாம் நாளில் "தமிழர் சூழலியல் என்ற தலைப்பில் பாமயன் அவர்களும், "வள்ளலாரும் தமிழும்" என்ற தலைப்பில் அட்சயா பாலசுப்ரமணியன் அவர்களும், "சிறுகதையும் திரைக்கதையும்" என்ற தலைப்பில் இயக்குநர் ராசி அழகப்பன் அவர்களும், "முத்தமிழும் முத்தமிழறிஞரும்" என்ற தலைப்பில் வழக்கறிஞர் தமிழன் பிரசன்னா அவர்களும், "கவிதை எமக்குத் தொழில்" என்ற தலைப்பில் கவிதா ஜவகர் அவர்களும், "தமிழ் பதிப்பியல் சிந்தனைகள்" என்ற தலைப்பில் இரங்கராஜன் அவர்களும்,
ஏழாம் நாளில் "நாடகம் எனும் கலை வடிவம்" என்ற தலைப்பில் நடிகர் கணேஷ் பாபு அவர்களும், "அயலகத் தமிழ்" எனும் தலைப்பில் சிங்கப்பூர் கல்வி அமைச்சு ஆசிரியர் மா. அர்ச்சுனன் அவர்களும், "பேச்சுக்கலை" எனும் தலைப்பில் கவிஞர் இராஜகம்பீரன் அப்பாஸ் அவர்களும், "மொழி காப்போம் இனம் காப்போம்" என்ற தலைப்பில் கவிஞர் பே.ராஜேந்திரன் அவர்களும், "இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்" என்ற தலைப்பில் இளைய சிலம்பொலி அருணை மா மதன்குமார் அவர்களும், "இணையத் தமிழ் பயன்பாடுகள் சிந்தனைகள்" எனும் தலைப்பில் பேராசிரியர் தேனி மு.சுப்ரமணி அவர்களும், கல்லூரிகளில் பயிலும் அருந்தமிழ்ப் பற்றாளர்களான இளந்தமிழர்களிடையே தங்களது அனுபவத்தைப் பகிர்ந்து அவர்களைப் பட்டை தீட்டவுள்ளனர்.
மேலும், இப்பயிற்சிப் பட்டறையில் பங்கு பெறும் மாணவர்களிடையே தமிழ் இலக்கிய வினாடி வினா நடத்தி பரிசுகள் வழங்குவதோடு, மாணவர்கள் புத்துணர்ச்சி பெறும் வகையில் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றக் கலைக் குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நாள்தோறும் மாலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை நடைபெறும்."
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.