< Back
கல்வி/வேலைவாய்ப்பு
மத்திய அரசு காப்பீட்டு நிறுவனத்தில் வேலை
கல்வி/வேலைவாய்ப்பு

மத்திய அரசு காப்பீட்டு நிறுவனத்தில் வேலை

தினத்தந்தி
|
18 Dec 2024 4:14 PM IST

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில், வேலைவாய்ப்பு அறிவிப்புகள் (Assistant Post ) தற்போது வெளியாகியுள்ளது.

இந்தியாவின் முதன்மையான பொது காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில், வேலைவாய்ப்பு அறிவிப்புகள் (Assistant Post ) தற்போது வெளியாகியுள்ளது.

இதற்கு தகுதியும் பணிஅனுபவமும்உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் விவரங்கள்: அசிஸ்டெண்ட் போஸ்ட் (Assistant Post )

மொத்தம் காலிப்பணியிடங்கள்: 500

வயது வரம்பு: 01.12.2024 தேதியின்படி, குறைந்த பட்ச வயது; 21 ஆண்டுகள், அதிக பட்ச வயது: 30 ஆண்டுகள்

வயது தளர்வு ;

ஒபிசி(OBC)- 3 ஆண்டுகள்

எஸ்சி/எஸ்டி (SC/ST)- 5 ஆண்டுகள்

கல்வித்தகுதி; அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு (Degree)முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை;

முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்காணல்

சம்பள விவரம்: ரூ.40,000/-

விண்ணப்பிக்கும் முறை: https://ibpsonline.ibps.in/niacl5anov24/index.phpஎன்ற இணயதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்; ரூ.850 ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

எஸ்சி/எஸ்டி. (SC/ST) மாற்றுத்திறனாளி பிரிவினர் ரூ.100 விண்ணப்பக்கட்டணமாக ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பம் தொடங்கும் நாள்:17.12.2024

விண்ணப்பிக்க கடைசி நாள்:01.01.2024

மேலும் வேலைவாய்ப்பு குறித்த விவரங்களுக்கு https://www.dailythanthi.com/news/education-and-employment பக்கத்தில் காணலாம்.

மேலும் செய்திகள்