< Back
கல்வி/வேலைவாய்ப்பு
இந்திய கட்டமைப்பு நிதி நிறுவனத்தில் வேலை
கல்வி/வேலைவாய்ப்பு

இந்திய கட்டமைப்பு நிதி நிறுவனத்தில் வேலை

தினத்தந்தி
|
21 Dec 2024 3:57 PM IST

இந்திய கட்டமைப்பு நிதி நிறுவனத்தில் (ஐ.ஐ.எப்.சி.எல்.,)) உள்ளபணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய கட்டமைப்பு நிதி நிறுவனத்தில் (ஐ.ஐ.எப்.சி.எல்.,) உள்ளபணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் பணிஅனுபவமும்உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி விவரம்:

அசிஸ்டென்ட் மேனேஜர் பிரிவில் பொது 12, அக்கவுன்ட்ஸ் 5, புராஜக்ட் பைனான்ஸ் 4, எச்.ஆர்., 2, ஐ.டி., 2, சட்டம் 2, சுற்றுச்சூழல் 2, ரிஸ்க் மேனேஜ்மென்ட் - 2

காலிப்பணியிடங்கள்: 40

கல்வி தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள், பணி அனுபவம் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயது வரம்பு : (30.11.2024ன் படி)குறைந்த பட்சம் 21 ஆண்டுகள்

அதிக பட்சம் 30 ஆண்டுகள்

வயது தளர்வு:

எஸ்சி/எஸ்டி(SC/ST) - 5 ஆண்டுகள்

ஓபிசி(OBC) - 3 ஆண்டுகள்

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு, நேர்காணல் மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை: https://ibpsonline.ibps.in/iifclamnov24/என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்; ரூ.600 ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

எஸ்சி/எஸ்டி. (SC/ST) மாற்றுத்திறனாளி பிரிவினர் ரூ.100 விண்ணப்பக்கட்டணமாக ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு: https://iifcl.in/

விண்ணப்பத்திற்கான கடைசி தேதி:23.12.2024

இது குறித்து கூடுதல் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்