விஷுவல் கம்யூனிகேஷன் படிப்புகள்: வேலை வாய்ப்புகள் என்னென்ன..?
|அதிவேகமாக தகவல் தொடர்பை ஏற்படுத்துவதற்காக விசுவல் கம்யூனிகேஷன் பயன்படுத்தப்படுகிறது.
ஒருவரின் அறிவு, எண்ணங்கள், உணர்வுகள், அல்லது புதிய சிந்தனைகள் ஆகியவற்றை சரியான முறையில் அர்த்தங்களை புரிந்து கொள்ளும் வகையில் மற்றவர்களுக்கு அனுப்பி, தொடர்பை ஏற்படுத்தும் நிலையை 'தகவல் தொடர்பு" (Communication Visual) என அழைக்கிறார்கள்.
தகவல் தொடர்பை சரியான முறையில் பயன்படுத்திய மனிதர்களும் நிறுவனங்களும் அமைப்புகளும் மிகச் சிறந்தவெற்றியை பெற்று வருவதை நாம் கண்கூடாக காணலாம்.
பொதுவாக, மனிதர்களின் பிறப்பு முதல் இறப்பு வரை தவிர்க்க இயலாத ஒன்றாக தகவல் தொடர்பு அமைந்துள்ளது.பேச்சு, எழுத்து ,சைகை, குரல் என பல வடிவங்களில் இந்த தகவல் தொடர்பு பரிமாறப்பட்டு வருகிறது.
வார்த்தைகள் மட்டுமே சரியான விளக்கங்களையும், , தகவல்களை புரிந்து கொள்வதற்கான சூழலையும் உருவாக்காத நிலையில், விசுவல் கம்யூனிகேஷன் மிக அத்தியாவசியமான தேவையாக கருதப்படுகிறது. வழங்கப்படும் தகவல்களை துல்லியமாக ,தெளிவாக விளக்கும் வகையில் தகவல் தொடர்பை ஏற்படுத்துவதை "விசுவல் கம்யூனிகேஷன்" (Visual Communication) மிகவும் எளிதாக்குகிறது.
விஷுவல் கம்யூனிகேஷன் பயன்கள்
அதிவேகமாக தகவல் தொடர்பை ஏற்படுத்துவதற்காக விசுவல் கம்யூனிகேஷன் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, இணையதளம் மற்றும் சோசியல் மீடியா மூலமாக தகவல்கள் பரிமாறப்பட்டு வருகின்றன.
வாக்காளர்களை சந்திக்கவும், அவர்களின் மன நிலைக்கு ஏற்ப அரசியல் கட்சிகளின் கொள்கைகளை வெளிப்படுத்தவும் ,தேர்தல் நேரத்தில் பிரச்சாரத்திற்கு உதவும் வகையில் செயல்பாடுகளை அமைத்துக் கொள்ளவும் இந்த "விஷுவல் கம்யூனிகேஷன்", அரசியல் கட்சிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பெருமளவில் இப்போது உதவி வருகிறது.
அறிவியல் சம்பந்தப்பட்ட தகவல்களை திரட்டவும், அதனை மக்களிடம் கொண்டு சேர்க்கவும், அதன் மூலம் பார்ப்பவர்களின் மனதில் தெளிவான சிந்தனையையும் அறிவு வளர்ச்சியையும் ஏற்படுத்தவும் "விஷுவல் கம்யூனிகேஷன் " உதவியாய் அமைகிறது. செய்திகளை சரியான முறையில் பகிர்ந்து கொள்ள ஊடகத் துறைக்கு அடித்தளமாக வும் உள்ளது.
சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, "62% நுகர்வோர்கள் தாங்கள் வாங்க விரும்பும் பொருட்களை ஊடகங்கள் மூலமாக படங்களாகவும், விளக்கப் படங்களாகவும் பார்த்து, விவரங்கள் தெரிந்த பின்பே பொருட்களை வாங்குகிறார்கள்" என அந்த ஆய்வு குறிப்பிடுகிறது. தொழில், வணிக நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் இந்த விசுவல் கம்யூனிகேஷன் பேரளவில் உதவி வருகிறது.
கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் வளர்ச்சிக்கு உதவும் வகையில் "விசுவல் கம்யூனிகேஷன்" அமைந்து விடுவதால், அதைப் பற்றிய படிப்புகளும் பயிற்சிகளும் நாள்தோறும் நிறுவனங்கள் வழங்கத் தொடங்கிவிட்டன.
விஷுவல் கம்யூனிகேஷன் படிப்புகள்
விஷுவல் கம்யூனிகேஷன் படிப்பில் பல்வேறு பட்ட மேற்படிப்புகள், பட்டப்படிப்புகள் மற்றும் டிப்ளமோ படிப்புகள் உள்ளன .அவற்றுள் சில..
பட்டப்படிப்புகள்
B.Sc Visual Communication
B.A Visual Communication,
B.F.A in Visual Communication.
B.B.A in Visual Communication
Bachelor of Fine Arts in Visual Communications
Bachelor of Visual Communication Design
Bachelor of Visual Communication Design (Honours)
பட்ட மேற்படிப்புகள்
5 Year Integrated B.Sc. - M.Sc. Visual Communication
MA Visual Communication
MA Design for Visual Communication
MA Design for Visual Communication (Online)
MFA in Visual Communication.
டிப்ளமோ படிப்புகள்
UG Diploma in Visual Communication and Digital Design.
Diploma in visual communication
பிஎஸ்சி இன் விசுவல் கம்யூனிகேஷன்
( B.Sc. in VISUAL COMMUNICATION)
"பி.எஸ்சி விசுவல் கம்யூனிகேஷன்" ( B.Sc. in VISUAL COMMUNICATION) படிப்பு மூன்று வருட படிப்பு. இந்த படிப்பு, விளம்பரம்(Advertising) , வெப் டிசைன் (Web Design ) வீடியோ போன்றவற்றில் முறையான பயிற்சியை வழங்குகிறது.
இந்த படிப்பில் பிளஸ்-2 தேர்வில் வெற்றி பெற்றவர்கள் சேர்ந்து படிக்கலாம். இருந்த போதும் பிளஸ்-2 தேர்வில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டியது அவசியமாகும்.
சில கல்லூரிகளில் சேர்வதற்கு நுழைவு தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவை நடத்தப்படுகின்றன.
இந்தப் படிப்பில் நடத்தப்படும் பாடங்கள் கல்வி நிறுவனங்களுக்கு ஏற்ப மாறுபடும் இருந்த போதும் கீழே குறிப்பிட்டுள்ள முக்கியமான பாடங்கள் இந்த படிப்பில் இடம்பெறுகிறது.
1. கிராபிக் டிசைன் (GRAPHIC DESIGN)
2. போட்டோகிராபி ( PHOTOGRAPHY)
3. டைப்போகிராபி (TYPOGRAPHY)
4. ஆடியோ விஷுவல் புரொடக்சன் ( VISUAL PRODUCTION)
5. வெப் டிசைன் (WEB DESIGN)
6. அனிமேஷன் அண்ட் கேம் ஆர்ட் (ANIMATION AND GAME ART)
7. டிஜிட்டல் எடிட்டிங் (DEGITAL EDITING)
8. ஃபிலிம் அப்ரிசியேஷன் ( FILM APPRECIATION)
8. மீடியா அண்ட் கம்யூனிகேஷன் மெதட்ஸ் ( MEDIA AND COMMUNICATION METHODS)
9. மார்க்கெட்டிங் அண்ட் பப்ளிக் ரிலேஷன்ஸ்.( MARKETING AND PUBLIC RELATIONS).
இவை தவிர விருப்ப பாடமாக கீழ்க்கண்ட பாடங்களும் கற்பிக்கப்படுகின்றன.
1. ஃபிலிம் ஸ்டடிஸ் ( FILM STUDIES)
2. போட்டோ ஜர்னலிசம் ( PHOTO JOURNALISM)
3. விர்ச்சுவல் ரியாலிட்டி (VIRTUAL REALITY)
4. ஆர்ட் அண்ட் ஈஸ்தட்டிக் (ART AND AESTHETIC)
5. ஈவன்ட் மேனேஜ்மென்ட் (EVENT MANAGEMENT).
விசுவல் கம்யூனிகேஷன் வழங்கும் வேலை வாய்ப்புகள்
விஷுவல் கம்யூனிகேஷன் படிப்பை முடித்தவர்களுக்கு பல நிறுவனங்களிலும் அமைப்புகளிலும் வேலை வாய்ப்புகள் உள்ளன குடிப்பாக விளம்பரத்துறை கல்வி நிறுவனங்கள் பொழுதுபோக்கு நிறுவனங்கள் ஆகியவற்றில் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன.
விசுவல் கம்யூனிகேஷன் படிப்பை முடித்தவர்களுக்கு கீழ்க்கண்ட பதவிகளுக்கான வேலை வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
1. கிராபிக் டிசைனர். (GRAPHIC DESIGNER)
2. வெப் டிசைனர் ( WEB DESIGNER)
3. ஆப் டிசைனர் ( APP DESIGNER)
4. போட்டோ ஜர்னலிஸ்ட் (PHOTO JOURNALIST).
5. வீடியோ எடிட்டர் ( VIDEO EDITOR)
6. ஆர்ட் டைரக்டர் (ART DIRECTOR)
7. அட்வெர்டைசிங் டிசைனர் (ADVERTISING DESIGNER)
8. டிசைன் எஜுகேட்டர். ( DESIGN EDUCATOR)
9. கம்யூனிகேஷன் மேனேஜர் (COMMUNICATION MANAGER).
இந்தப் படிப்பை முடித்தவர்களுக்கு ஆண்டுதோறும் சுமார் இரண்டரை லட்சம் முதல் 16 லட்சம் வரை சம்பளம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
இருந்தபோதும், விசுவல் கம்யூனிகேஷன் படித்தவர்களின் அனுபவம் தனித்திறமைகள் மற்றும் பணி வழங்குபவர்கள் விருப்பங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த சம்பள விகிதங்கள் மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
சிறந்த கல்வி நிறுவனத்தை தேர்ந்தெடுப்பது எப்படி?
இந்தியாவில் பல இடங்களில் விசுவல் கம்யூனிகேஷன் படிப்பை பல்வேறு கல்வி நிறுவனங்கள் நடத்தி வருகின்றன .இருந்த போதும், அந்த நிறுவனங்களிலும் தேவையான பயிற்சிகள் வழங்கப்படுகிறதா? இல்லையா? என்பதை முன்கூட்டியே தெரிந்து கொண்டு அந்த கல்வி நிறுவனத்தில் சேர்ந்து பயிற்சி பெறுவது நல்லது.
குறிப்பாக, அந்தக் கல்வி நிறுவனத்தின் பாடத்திட்டங்கள், பயிற்சிகள் வழங்கும் பேராசிரியர்கள், பயிற்சி மற்றும் படிப்புக்கான கட்டணம், கட்டமைப்பு வசதிகள், கல்லூரிக்கான அங்கீகாரம், முன் களப்பயிற்சி வகுப்புகள், பணிகள் பெறுவதற்கான வசதிகள், நேர்முகத் தேர்வுக்கான பயிற்சிகள் ஆகியவை அந்த கல்வி நிறுவனத்தில் முறைப்படி வழங்கப்படுகிறதா என்பதை தெரிந்து கொண்டு அதன் பின்னர் அந்த நிறுவனத்தில் சேர்ந்து படிப்பது நல்லது.