டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் தொழில்நுட்ப பணிகளுக்கான போட்டித் தேர்வு இன்று தொடக்கம்
|இந்த தேர்வை, 95 ஆயிரத்து 925 தேர்வர்கள் எழுதுகின்றனர்.
சென்னை,
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.), ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் (நேர்முகத் தேர்வுகள் அல்லாத) அடங்கிய பதவிகளை நிரப்ப உள்ளது. மொத்தம் 654 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கான போட்டித் தேர்வுகள் இன்று தொடங்குகின்றன. தமிழகம் முழுவதும் 161 மையங்களில் கணினி வழித் தேர்வானது இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வருகிற 23-ந்தேதி வரை (அக்டோபர் 19, 20-ந்தேதிகள் தவிர) நடைபெற உள்ளது.
அதேபோல், வருகிற 26-ந்தேதி கொள்குறி வகையில் தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வை, 95 ஆயிரத்து 925 தேர்வர்கள் எழுதுகின்றனர். சென்னையில் 45 மையங்களில் 13 ஆயிரத்து 425 தேர்வர்கள் எழுதுகிறார்கள். செல்போன், மின்னணு கருவிகள் ஆகியவற்றை தேர்வு அறைகளுக்கு கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டு உள்ளது. தேர்வின்போது, தடை செய்யப்பட்ட கருவிகளை தேர்வர்கள் வைத்திருப்பது கண்டறியப்பட்டால் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று டி.என்.பி.எஸ்.சி எச்சரித்து உள்ளது.