குரூப்-2 தேர்வு விடைத்தாள்கள் மதிப்பீட்டில் முறைகேடு இல்லை-டி.என்.பி.எஸ்.சி. விளக்கம்
|குரூப்-2 தேர்வு விடைத்தாள்கள் மதிப்பீட்டில் முறைகேடு இல்லை என டி.என்.பி.எஸ்.சி. விளக்கம் அளித்துள்ளது.
சென்னை,
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் விளக்கத்தை அளித்துள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
விரிந்துரைக்கு வகை தேர்வில் தேர்வர்களின் விடைத்தாள்களில் உள்ள ஒவ்வொரு வினாவின் விடையும் பல்வேறு மதிப்பீட்டாளர்களால் மதிப்பீடு செய்யப்படுவதால் ஏற்படும் வேறுபாடுகளை குறைப்பதற்காக, ஒரு தேர்வரின் ஒவ்வொரு வினாவுக்கான விடையும் 2 முறை மதிப்பீடு செய்யப்படுகிறது. அவ்வாறு 2 முறை மதிப்பீடு செய்யப்பெற்று பெறப்பட்ட மொத்த மதிப்பெண்களின் சராசரியே தேர்வரின் மதிப்பெண்ணாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.
மேலும் 2 முறை மதிப்பீடு செய்யப்பெற்று பெறப்பட்ட மொத்த மதிப்பெண்களுக்கு இடையே 15 சதவீதத்துக்கு மேற்பட்ட வேறுபாடு இருப்பின் தேர்வாணையம் அந்த தேர்வரின் அனைத்து வினாக்களின் விடைகளையும் 3-வது முறை மதிப்பீடு செய்கிறது.2023-ல் நடந்த குரூப்-2, 2ஏ முதன்மைத் தேர்வில் விரிந்துரைக்கும் வகை விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் எந்தவித முறைகேடும் இல்லை. தவறான தகவலை பரப்ப வேண்டாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.