< Back
கல்வி/வேலைவாய்ப்பு
இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படையில் சப்-இன்ஸ்பெக்டர், தலைமை காவலர்,காவலர் வேலை... 526 பணியிடங்கள்
கல்வி/வேலைவாய்ப்பு

இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படையில் சப்-இன்ஸ்பெக்டர், தலைமை காவலர்,காவலர் வேலை... 526 பணியிடங்கள்

தினத்தந்தி
|
7 Nov 2024 4:29 PM IST

இந்தோ - திபெத் எல்லை போலீஸ் படையில் (ஐ.டி.பி.பி.,) சப்-இன்ஸ்பெக்டர், தலைமை காவலர் மற்றும் காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படையில் (ITBP) தொலைத்தொடர்பு பிரிவில் சப்-இன்ஸ்பெக்டர் (தொலைத்தொடர்பு), தலைமை காவலர் (டெலிகாம்) மற்றும் காவலர் (டெலிகாம்) பணிக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.ஆர்வமும் தகுதியும் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

மொத்த காலியிடங்கள்: 526

சப்-இன்ஸ்பெக்டர்-92, தலைமை காவலர்-383 மற்றும் காவலர்-51 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கல்வி தகுதி:

சப்-இன்ஸ்பெக்டர்: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி./பி.டெக்/பிசிஏ( B.sc/ B.Tech/ BCA)

தலைமை காவலர்:12வது தேர்ச்சியுடன் பிசிஎம்/ஐடிஐ/டிப்ளமோ என்ஜினீயரிங் (PCM/ITI/Diploma in Engineering)

காவலர்: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

சப்-இன்ஸ்பெக்டர்: 20 வயது முதல் அதிகபட்சம் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தலைமை காவலர்: 18 வயது முதல் அதிகபட்சம் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

காவலர்: 18 வயது முதல் அதிகபட்சம் 23 வயதிற்குள் இருக்க வேண்டும்

வயது தளர்வு:

ஓ.பிசி(கிரீமி லேயர்)- 3 ஆண்டுகள்

எஸ்.சி-எஸ்.டி- 5 ஆண்டுகள்

முன்னாள் படைவீரர்கள் (பொது)இராணுவ சேவையிலிருந்து 03 வருடங்கள் கழித்து

முன்னாள் ராணுவத்தினர் (ஓ.பிசி(கிரீமி லேயர்)- 6 ஆண்டுகள்

முன்னாள் ராணுவத்தினர் (எஸ்.சி-எஸ்.டி)- 8 ஆண்டுகள்

துறை சார்ந்த விண்ணப்பதாரர்கள்-5 ஆண்டுகள்

தேர்வு முறை:

உடல் தகுதி தேர்வு, எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு,மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

சப்-இன்ஸ்பெக்டர் - பொது பிரிவினர்,ஓபிசி,ஈடபிள்யூஎஸ் (UR) / OBC / EWS ரூ.200 செலுத்த வேண்டும்.

தலைமை காவலர் & காவலர் பொது பிரிவினர்,ஓபிசி,ஈடபிள்யூஎஸ் (UR) / OBC / EWS ரூ.100 செலுத்த வேண்டும். ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

எஸ்.சி., எஸ்.டி., முன்னாள் ராணுவத்தினர்,பெண்களுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் விண்ணப்பிக்க தேதி ஆரம்பம்: 15 நவம்பர் 2024 (அதிகாலை 1:00)

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி:14 டிசம்பர் 2024 (இரவு 11:59)

தேர்வு அறிவிப்பினை படிக்க: https://recruitment.itbpolice.nic.in/



மேலும் செய்திகள்