< Back
கல்வி/வேலைவாய்ப்பு
அக்னி வீரர்களுக்கு இடஒதுக்கீடு - மத்திய அரசு நிறுவனம் அறிவிப்பு
கல்வி/வேலைவாய்ப்பு

அக்னி வீரர்களுக்கு இடஒதுக்கீடு - மத்திய அரசு நிறுவனம் அறிவிப்பு

தினத்தந்தி
|
28 Sept 2024 7:19 AM IST

அக்னி வீரர்களுக்கான வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீட்டு முறையை பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.


ராணுவத்தில் இருந்து 4 ஆண்டு பணிக்குப் பின் விடுவிக்கப்படும் அக்னி வீரர்கள் காவல்துறையில் சேர இடஒதுக்கீடு அறிவிப்புகளை அரியானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் அறிவித்துள்ளன. மத்திய ஆயுத படையில் சேர அக்னி வீரர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில் அக்னி வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு அறிவிப்பை பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் 'பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ்' நிறுவனம் அறிவித்து உள்ளது.

டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பும், ரஷியாவின் ராணுவ தொழில்துறை கூட்டமைப்பும் இணைந்து பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தை துவக்கி ஏவுகணைகளை வடிவமைத்து வருகிறது. இந்நிறுவனம் அக்னி வீரர்களுக்கு வேலைவாயப்புகளில் இட ஒதுக்கீட்டை அறிவித்தது, இதன் படி பாதுகாப்பு மற்றும் நிர்வாகப்பிரிவுகளில் 50 சதவீதம் இடஒதுக்கீடும், தொழில்நுட்ப பிரிவில் 15 சதவீதம் இட ஒதுக்கீட்டு முறையை அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்