< Back
கல்வி/வேலைவாய்ப்பு
பெட்ரோலிய துறை சார்ந்த படிப்புகள்... உடனே வேலை கிடைக்க வாய்ப்பு; முழு விவரம்
கல்வி/வேலைவாய்ப்பு

பெட்ரோலிய துறை சார்ந்த படிப்புகள்... உடனே வேலை கிடைக்க வாய்ப்பு; முழு விவரம்

தினத்தந்தி
|
20 Dec 2024 2:58 PM IST

அடுத்த 30-40 வருடங்களுக்கு வேலைவாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும் என்று துறை வல்லுநர்களால் கணிக்கப்படுகிறது.

செழிக்கும் பெட்ரோலியம் துறை உலகப் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் பெட்ரோலியம் துறையில் பங்காற்றிட பல வாய்ப்புகள் உள்ளன. இந்தத்துறையில் பணியாற்றுவதன் மூலம். உங்கள் பொருளாதார நிலையும் உயரும். முதலில் "பெட்ரோலியம் குறித்து காணலாம்.

"பெட்ரோலியம்" என்பது விலங்குகள் மற்றும் தாவரங்களின் எச்சங்களிலிருந்து உருவாகும் புதைவடிவ எரிபொருட்கள் (Fossil Fuel), பல இயற்கை செயல்முறைகளுக்குப் பிறகு வண்டல் பாறை (Sedimentary Rock)- குவிந்து நிற்கும். அதை தொழில்நுட்பங்கள் மூலம் எவ்வித பாதிப்புமின்றி சிறந்த முறையில் வெளிக்கொண்டு வருவதற்கான சிறப்பு பொறியியல் படிப்பாக பெட்ரோலியம் பொறியியல் படிப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.

"பெட்ரோலியம் பொறியியல்" என்ற தனி பட்டப்படிப்பு உருவாகுவதற்கு முன் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்கு மெக்கானிக்கல் துறை இதில் அதிகம் பங்காற்றி வந்தது தொழில்நுட்பமும், கண்டுபிடிப்பும் பெருகும் இச்சூழலில், பொறியியல் துறையில் தனி பட்டப்படிப்பாக பெட்ரோலியம் படிப்பு தற்போது செயல்பட்டு வருகிறது. எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதில் மொத்தம் மூன்றுப் பிரிவுகள் உள்ளன. அவை மேல்நிலை (upstream), இடைநிலை ( Midstream) மற்றும் கீழ்நிலை (Downstream) உள்ளிட்டவையாகும்.

"மேல்நிலை (Upstream)" என்பது எண்ணெய் மற்றும் எரிவாயு இருக்கும் இடங்களை தொழில்நுட்பம் வாயிலாக கண்டறிதல், நிலம் கையகப்படுத்துதல், ஆய்வு மற்றும் வெளிக்கொண்டு வருவதற்கான செயல்பாடுகளை முன்னெடுத்தல் ஆகும் 11 "இடைநிலை (Midstream)" என்பது வெளிக்கொண்டு வரும் எண்ணெய் மற்றும் எரிவாயுகளை குழாய், டேங்கர் லாரி, கப்பல் போன்றவைகள் மூலம் வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சேமிப்பதாகும் "கீழ்நிலை (Downstream)" என்பது சேமிக்கப்பட்ட எண்ணெய் மற்றும் எரிவாயுகளை சுத்திகரிப்பு செய்து, அதன் மூலம் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், எரிவாயு உட்பட பல கிளைப்பொருட்களாக உருவமாற்றி சந்தையில் விற்பனை மூலம் வர்த்தகம் செய்வதாகும்.

எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் சிவில், மெக்கனிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்மேஷன், பெட்ரோலியம் போன்ற பொறியியல் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்புகள் உள்ளன அதுமட்டுமின்றி, கலை மற்றும் அறிவியல் துறையின் கீழ், வரும் பல படிப்புகளுக்கும், நிர்வாக மேலாண்மை படிப்புகளுக்கும் வேலைவாய்ப்புகள் உள்ளன. இத்துறையில் மேலே குறிப்பிட்ட மூன்றுப்பிரிவுகளிலும் அடுத்த 30-40 வருடங்களுக்கு வேலைவாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும் என்று துறை வல்லுநர்களால் கணிக்கப்படுகிறது. (Indian Institute of Technology) நடத்தும் GATE தேர்வு எழுதி அதிக மதிப்பெண்கள் எடுப்பதன் மூலம் ONGC உள்ளிட்ட இந்திய எண்ணெய் நிறுவனங்களில் பணிக்கு விண்ணப்பிக்க முடியும். இந்தத் தேர்வானது பொறியியல் பட்டதாரிகளுக்கு மட்டுமே பொருந்தும்.


கட்டுரையாளர் -

ஹமீத் ரஸீன் பெட்ரோலியம் பொறியாளர்

குவைத்

மேலும் செய்திகள்