பணம் அச்சடிக்கும் நிறுவனத்தில் வேலை: யார் யார் விண்ணப்பிக்கலாம்?
|காலியாக உள்ள உதவி மேலாளர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பணம் அச்சடிக்கும் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள உதவி மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
காலியிடங்கள்: 23 பணியிடங்கள்
பணி:
I.உதவி மேலாளர் (IT):
1. உதவி மேலாளர் (IT)- அப்ளிகேஷன் டெவலப்பர்: 2
2. உதவி மேலாளர்- சைபர் செக்கியூரிட்டி - 1
3. உதவி மேலாளர் (IT)- Open Source Application Developer: 1
II.உதவி மேலாளர் நிதி & கணக்குகள்-10
III. உதவி மேலாளர் -மனித வள மேலாண்மை-6
IV. உதவி மேலாளர் -பொருட்கள் மேலாண்மை-1
V.உதவி மேலாளர் தகவல் தொழில்நுட்பம்-1
VI.உதவி மேலாளர் சட்டம்-1
சம்பளம் விவரம்:ரூ.50,000-1,60,000.
வயது வரம்பு: 24.11.2024 அன்று 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
வயது தளர்வு:
எஸ்சி/எஸ்டி(SC/ST) - 5 ஆண்டுகள்
ஓபிசி(OBC) - 3 ஆண்டுகள்
விண்ணப்பக் கட்டணம்:
பொது/ஒபிசி/ பொருளாதார பிற்பட்டோர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர். ரூ.600 செலுத்த வேண்டும்.
எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு தகவல் கட்டணமாக ரூ.200 மட்டும் ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
தேர்வு முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்கானல்
கல்வி தகுதி: சம்பந்தப்பட்ட துறைகளில் முதுநிலை பட்டம்/இளங்கலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்.
விண்ணப்பக்கும் முறை:www.spmcil.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்திற்கான தொடக்க தேதி-25.10.2024
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி-24.11.2024
.விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி தேதி: 25.10.2024 to 24.11.2024