< Back
கல்வி/வேலைவாய்ப்பு
கல்வி/வேலைவாய்ப்பு
என்ஜினியரிங் முடித்தவர்களுக்கு வேலை : 232 பணியிடங்கள்- யுபிஎஸ்சி அறிவிப்பு
|4 Oct 2024 11:31 AM IST
என்ஜினியரிங் முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பினை மத்திய சிவில் சர்வீஸ் தேர்வு முகமையான யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
தேர்வு நடத்தும் நிறுவனம்: யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்(யுபிஎஸ்சி)
காலி பணி இடங்கள்: 232
கல்வி தகுதி: பி.இ., பி.டெக்., எம்.எஸ்சி.
வயது: 1-1-2025 அன்றைய தேதிப்படி 21 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 2-1-1995-க்கு முன்போ, 1-1-2004-க்கு பின்போ பிறந்திருக்கக்கூடாது. அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 5 ஆண்டுகள் வரை வயது தளர்வு அனுமதிக்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு.
தேர்வு முறை: என்ஜினீயரிங் முதல் நிலை தேர்வு, முதன்மை தேர்வு, ஆளுமைத்திறன் தேர்வு
தேர்வு நடைபெறும் இடம் (தமிழ்நாடு): சென்னை, மதுரை
விண்ணப்பிக்க கடைசி நாள்: 8-10-2024
மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள இணையதள முகவரி: https://upsc.gov.in/