ஐ.ஐ.டி. நடத்தும் படிப்புகள்; சேர்வது எப்படி?
|சென்னையிலுள்ள“இந்தியன் இன்ஸ்டிட்டியூட் ஆப் டெக்னாலஜி”என்னும் கல்வி நிறுவனத்தில் பல்வேறு துறைகள் இயங்குகின்றன.
பொறியியல் மற்றும் தொழில் நுட்பத்துறையில் முன்னேற்றம் காண்பதற்காக இந்தியாவில் தொடங்கப்பட்ட பொறியியல் சார்ந்த கல்வி நிலையங்கள் ஏராளம் உள்ளன. அந்த கல்வி நிலையங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படும் பொறியில் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரியாக விளங்குவது "இந்தியன் இன்ஸ்டிட்டியூட் ஆப் டெக்னாலஜி" என்னும் கல்வி நிறுவனம் ஆகும்.
இந்தக் கல்விநிறுவனம் கராக்பூர், மும்பை, சென்னை, கான்பூர், டெல்லி, கவுகாத்தி, ரூர்க்கி, ரோபார் (ROPAR), புவனேஷ்வர், காந்திநகர், ஹைதராபாத், ஜோத்பூர், பாட்னா, இந்தூர், மாண்டி(MANDI), வாராணாசி, பாலகாடு, திருப்பதி, தன்பாத், பிலாய், தார்வாட்(DHARWAD), ஜம்மு, கோவா, ஜான்சிபாத்-தான்சானியா (ZANZIBAR-TANZANIA), அபுதாபி(ABUDHABI-UAE) போன்ற இடங்களில் செயல்பட்டுவருகிறது. உலக அளவில் மிகச்சிறந்த கல்வி நிறுவனமாகக் கருதப்படும். இந்த நிறுவனத்தில் பல்வேறு பட்டப்படிப்புகளும், பட்ட மேற்படிப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன. "இந்தியன் இன்ஸ்டிட்டியூட் ஆப் டெக்னாலஜி (Indian Institute of Technology) என்னும் இந்த நிறுவனத்தை "ஐ.ஐ.டி."(IIT) என்றும் அழைப்பார்கள்.
ஐ.ஐ.டிதுறைகள் (DEPARTMENTS)
சென்னையிலுள்ள"இந்தியன் இன்ஸ்டிட்டியூட் ஆப் டெக்னாலஜி"என்னும் கல்வி நிறுவனத்தில் பல்வேறு துறைகள் இயங்குகின்றன. அவை -
விண்வெளி பொறியியல்
அப்ளைடு மெக்கானிக்ஸ்
உயிரி தொழில்நுட்பம்
வேதியியல் பொறியியல்
வேதியியல்
சிவில் இன்ஜினியரிங்
கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
மின் பொறியியல்
பொறியியல் வடிவமைப்பு
மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல்
மேலாண்மை ஆய்வுகள்
கணிதம்
இயந்திர பொறியியல்
உலோகவியல் மற்றும் பொருட்கள் பொறியியல்
கடல் பொறியியல்
இயற்பியல்
ஐ.ஐ.டிபடிப்புகள்(COURSES)
இந்த துறைகளின் சார்பில் கீழ்க்கண்ட பட்டப்படிப்புகள், பட்ட மேற்படிப்புகள் மற்றும் டிப்ளமோ படிப்புகள் நடத்தப்படுகிறன. இந்தப் படிப்புகளின் விவரம் வருமாறு:
பி.டெக் - ஹானர்ஸ் உட்பட தொழில்நுட்ப இளங்கலை
பி.எச்.டி.: தத்துவவியல் (Philosophy).
இரட்டை பட்டம்(பி டெக்& எம்.டெக்) பி.இ& எம்.இ இரட்டை பட்டம் (Dual Degree) (பி.எஸ். & எம்.எஸ்) Dual
எம்.ஏ - ஒருங்கிணைந்த சிறப்பு பட்டம் ( Integrated MA programme with specializations.)
எம்பிஏ -முதுகலை வணிக நிர்வாகம்.
எம்எஸ்சி - மாஸ்டர் ஆஃப் சயின்ஸ்.
எம்.எஸ்-ஆராய்ச்சி மூலம் அறிவியல் மாஸ்டர் ஒரு ஆய்வுக் கட்டுரையை உள்ளடக்கியது.
எம்.டெக் - மாஸ்டர் ஆப் டெக்னாலஜி.
பிஜி டிப்ளமோ: முதுகலை பட்டம் டிப்ளமோ (Post Graduate Diploma).
ஐ.ஐ.டி.மாணவர் சேர்க்கைக்கான தேர்வுகள்
ஐ.ஐ.டி. நிறுவனங்களில் நடத்தப்படும் பல்வேறு படிப்புகளில் சேருவதற்கு கீழ்க்கண்ட தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அவை -
1.ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வு
இந்தியன் இன்ஸ்டிட்டியூட் ஆப் டெக்னாலஜி பல்வேறு பட்டப்படிப்புகளை (Bachelor Degree), பொறியியல் (Engineering) தொழில்நுட்பம் (Technological) மற்றும் அறிவியல் (Science) ஆகிய துறைகளில் நடத்துகிறது.
M.Sc., Integrated Courses, Dual Degree M.Tech.
Programmes ஆகிய படிப்புகளையும் நடத்துகிறது. இந்தப் படிப்புகளில் சேர ஜே.இ.இ. அட்வான்ஸ்டு(JEE Advanced)என்னும் தேர்வு எழுத வேண்டியது அவசியமாகும்.
2.கேட் தேர்வு(GATE EXAM) (GRADUATE APTITUDE TEST IN ENGINEERING)
அகில இந்திய அளவில் கேட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு ஐ.ஐ.டி.யில் பட்ட மேற்படிப்பில் சேரவும், பொறியியல் கல்லூரிகளில் அரசு உதவித்தொகை (Government Scholarships) பெறவும் உதவியாக அமைகிறது.
3.ஜாம் தேர்வு (JAM EXAM) (JOINT ADMISSION TEST)
2004-2005 -ஆம் கல்வி ஆண்டு முதல் இந்தியன் இன்ஸ்டிட்டியூட் ஆப் டெக்னாலஜி தங்கள் நிறுவனம் நடத்தும் எம்.எஸ்.சி. பட்ட மேற்படிப்பில் சேருவதற்கும், ஜாயிண்ட் எம்.எஸ்.சி.-பி.எச்.டி.(Joint M.Sc.,-Ph.D.) எம்.எஸ்.சி.பி.எச்.டி (M.Sc.-Ph.D., DualDegree) மற்றும் வேறு சில பட்டப் படிப்புகளில் சேரவும் இந்த ஜாம் எனப்படும் ஜாயிண்ட் என்டரன்ஸ் எக்ஸாம் நடத்தப்படுகிறது. அறிவியல் துறையில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு பட்டப்ப டிப்பை சிறப்பான முறையில் நிறைவு செய்ய விரும்புபவர்கள் ஜாம் தேர்வை (JAM EXAM) எழுதலாம்.
4.சீட் தேர்வு (CEED EXAM)
"காமன் என்ட்ரன்ஸ் எக்ஸாமினேஷன் பார்டிசைன்" என்னும் தேர்வு அகில இந்திய அளவில் நடத்தப்படும் தேர்வாகும். இந்தத்தேர்வில் வெற்றிபெற்றவர்கள் "மாஸ்டர் ஆப் டிசைன்" (Master of Design) (M.Des) என்னும் படிப்பில் சேர தகுதி படைத்தவர்கள் ஆவார்கள். இந்தப் படிப்பு பெங்களூரிலுள்ள "இந்தியன் இன்ஸ்டிட்டியூட் ஆப் சயின்ஸ்"(IISc) என்னும் நிறுவனத்திலும், மும்பை, டெல்லி, கவுகாத்தி, கான்பூர் ஆகிய இடங்களிலுள்ள ஐ.ஐ.டி. நிறுவனங்களிலும் நடத்தப்படுகிறது. இவை தவிர, சில முக்கிய கல்வி நிறுவனங்களில் நடத்தப்படும் பி.எச்.டி. படிப்புகளில் சேரவும் இந்தத்தேர்வு முக்கியத் தேர்வவாகக் கருதப்படுகிறது.
2025-ஆம்ஆண்டு நடைபெறும் ஜே.இ.இ. தேர்வு
2025ஆம்ஆண்டுநடத்தப்படும் ஜே.இ.இ. மெயின் தேர்வு(JEE Main Exam) பற்றிய அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் படி - ஜேஇஇ மெயின் தேர்வு, Session-1, Session-2 என 2 பிரிவுகளாகநடத்தப்படும். Session-1 ஜே.இ.இ. (மெயின்) தேர்வு எழுத விரும்புபவர்கள் 22.11.2024-ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இந்ததேர்வு வரும் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்22 ஆம்தேதி முதல்31 ஆம் தேதி வரை இந்தத் தேர்வு நடைபெறும் என "நேஷ்னல் டெஸ்டிங் ஏஜென்சி"(NATIONAL TESTING AGENCY) வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Session-2 ஜே.இ.இ. (மெயின்) தேர்வுஎழுத விரும்புபவர்கள் 30.01.2025 முதல் 24.02.2025-ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவேண்டும். இந்தத்தேர்வு வரும்2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1 ஆம்தேதிமுதல் 8ஆம் தேதி வரை இந்தத் தேர்வுநடைபெறும்.
ஜே இ.இ.மெயின் தேர்வு பி.இ., பி.டெக்., பி.பிளானிங் (B-planning), ஆகிய படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு 3 மணி நேரம் நடைபெறும். மேலும், பி.ஆர்க்., மற்றும் பி.பிளானிங் என்னும் இந்தப் படிப்பில் சேரநடத்தப்படும். ஜே.இ.இ. தேர்வு 3 மணி 30 நிமிடங்கள் நடத்தப்படும் என்பது குறிப்படத்தக்கது.
மேலும்விவரங்களுக்கு
இந்த தேர்வு பற்றி மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
NATIONAL TESTING AGENCY
First Floor, NSIC-MDBP Building,
Okhla Industrial Estate,
New Delhi, Delhi-110020.
இணையதளமுகவரி: jeemain.nta.nic.in
மின்னஞ்சல்முகவரி: jeemain@nta.ac.in
தொலைபேசிஎண்: 011-69227700, 011-40759000