< Back
கல்வி/வேலைவாய்ப்பு
பயிற்றுனர் சட்டங்களின்படி ஒரு வருடகால பயிற்சி பெற பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் - தமிழக அரசு
கல்வி/வேலைவாய்ப்பு

பயிற்றுனர் சட்டங்களின்படி ஒரு வருடகால பயிற்சி பெற பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் - தமிழக அரசு

தினத்தந்தி
|
15 Nov 2024 7:53 PM IST

பயிற்றுனர் சட்டங்களின்படி ஒரு வருடகால பயிற்சி பெற பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை,

தொழிற் பழகுநர் வாரியத்தின் ஒத்துழைப்புடன் பயிற்றுனர் சட்டங்களின்படி ஒரு வருடகால பயிற்சி பெற பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

"தமிழ்நாடு, பொதுப்பணித்துறை, தொழிற் பழகுநர் வாரியம்(தென் மண்டலம்) ஒத்துழைப்புடன், 2020, 2021, 2022, 2023 மற்றும் 2024 ஆகிய வருடங்களுக்கு தமிழ் நாட்டிலிருந்து, பட்டம்/பட்டயம் பெற்ற (CIVIL/ EEE / Arch) மற்றும் பொறியியல் அல்லாத பட்டதாரிகள் (BA / BSc / BCom / BBA / BBM / BCA etc) ஆகிய பிரிவுகளில் தேர்ச்சியுற்ற பொறியாளர்களிடமிருந்து பயிற்றுனர் சட்டங்களின்படி ஒரு வருடகால பயிற்சி பெற நிகழ்நிலை விண்ணப்பங்கள் (online Application) வரவேற்கப்படுகின்றன.

மேலும், விவரங்களுக்கு www.boat-srp.com (News & Events) எனும் இணையதள முகவரியினைக் காணவும். நிகழ்நிலை விண்ணப்பங்கள் (online Application) பெற கடைசி நாள் 31.12.2024 ஆகும்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்