< Back
கல்வி/வேலைவாய்ப்பு
தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
கல்வி/வேலைவாய்ப்பு

தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

தினத்தந்தி
|
21 Nov 2024 5:13 PM IST

சென்னை தலைமை அலுவகத்தில் உள்ள காலி பணியிடம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை,

தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனத்தின் சென்னை தலைமை அலுவகத்தில் உள்ள தலைமை செயல் அலுவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

"பணிபுரியும் பெண்களுக்கு குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய தங்கும் விடுதிகளை செயல்படுத்தி சமூக நலத் துறையின் கீழ் சிறப்பு நோக்கத்திற்கான திட்டம் (SPV) நிறுவப்பட்டுள்ளது. தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் (TNWWHCL) என்ற பெயரில் இந்த முயற்சி பிப்ரவரி 6, 2020 முதல் செயல்படுத்தப்படுகிறது.

புதிய விடுதிகளை உருவாக்குவதும், தற்போதுள்ள பணிபுரியும் பெண்கள் விடுதிகளை மேம்படுத்துவதும்,அனைத்து பிரிவு மகளிரும் பயனடையும் வகையில் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனத்தின் சென்னை தலைமை அலுவகத்தில் பின்வரும் காலி பணியிடம் உடனடியாக நிரப்பப்பட உள்ளது.

வ.எண்

பதவி பெயர்

காலியிடங்களின் எண்ணிக்கை

1

தலைமை செயல் அலுவலர்

1

விண்ணப்பத்தைப் பெறுவதற்கான காலக்கெடு 05.12.2024 மாலை 5.00 மணி வரை. மேலும் விவரங்கள் www.tnwwhcl.in இணையதளத்தில் விரிவாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்