< Back
கல்வி/வேலைவாய்ப்பு
வேலை வாய்ப்புகளை அள்ளிக் கொடுக்கும் காஸ்ட் அன்ட் மேனேஜ்மெண்ட் அக்கவுண்டன்ட் படிப்பு
கல்வி/வேலைவாய்ப்பு

வேலை வாய்ப்புகளை அள்ளிக் கொடுக்கும் காஸ்ட் அன்ட் மேனேஜ்மெண்ட் அக்கவுண்டன்ட் படிப்பு

தினத்தந்தி
|
4 Nov 2024 5:30 AM IST

காஸ்ட் அன்ட் மேனேஜ்மெண்ட் அக்கவுண்டன்ட்" படிப்பை "சி.எம்.ஏ. படிப்பு" என்றும் அழைப்பார்கள். இந்தப்படிப்பு மொத்தம் 3 பிரிவுகளாக நடத்தப்படுகிறது

சென்னை,

ஒரு நிறுவனத்தின் நிதி நிலைமையை தெளிவாகத் தெரிந்துகொண்டு அந்த நிறுவனத்தின் நிதியை சிறப்பான முறையில் நிர்வகிக்கவும், நிறுவனத்திலுள்ள நடைமுறைச் செலவுகளை மதிப்பீடு செய்து தேவையில்லா செலவுகளை குறைத்து, தரமான உற்பத்திக்கு உதவும்வகையில் முடிவுகள் எடுக்க துணையாய் அமையும் படிப்பு "காஸ்ட் அன்ட் மேனேஜ்மெண்ட் அக்கவுண்டன்ட் படிப்பு"(Cost and Management Accountant Course) ஆகும்.

நிறுவனத்தின் நிதி ஆதாரங்களை சிறப்பான முறையில் பகுப்பாய்வுசெய்து சிறந்த முதலீட்டு கொள்கைகளை வகுத்துக்கொள்ளவும், இந்தப் படிப்பு முடித்தவர்கள் ஒரு நிறுவனத்திற்கு பேரூதவியாக அமைகிறார்கள்.இந்தப் படிப்பை "தி இன்ஸ்டிட்டியூட் ஆஃப் காஸ்ட் அக்கவுண்டன்ஸ் ஆஃப் இந்தியா" (The Institute of Cost Accountants of India)என்னும் அமைப்பு நடத்துகிறது.

வேலை வாய்ப்புகள்

காஸ்ட் அன்ட் மேனேஜ்மெண்ட் அக்கவுண்டன்ட்" படிப்பை (Cost and Management Accountant Course) முடித்தவர்களுக்கு உலகமெங்கும் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. இந்தப்படிப்பு முடித்தவர்களுக்கு அதிக சம்பளமும் ஆரம்ப நிலையிலேயே கிடைக்க வாய்ப்புள்ளது.

பல நிறுவனங்களில் மிக உயர்ந்த பணிகளான -

v மேலாண் இயக்குநர் (Managing Director)

v முதன்மை கணக்காளர் (Chief Accountant)

v நிதிக்கட்டுப்பாட்டு அதிகரி; (Financial Controller)

v நிதி இயக்குநர் (Financial Director)

v முதன்மை நிறுவன தணிக்கையாளர் (Chief Internal Auditor)

v செலவு கட்டுப்பாட்டு அதிகாரி; (Cost Controller)

v நிதி பகுப்பாய்வாளர் (Financial Analyst)

v மேலாண்மை கணக்காளர் (Management Accountant)

v செலவு கணக்காளர் (Cost Accountant)

v முதன்மை நிதி அலுவலர் (Chief Financial Officer) [CFO]

- போன்ற பணிகள் காஸ்ட் அன்ட் மேனேஜ்மெண்ட் அக்கவுண்டன்ட் படிப்பை முடித்தவர்களுக்கு வழங்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், மாதந்தோறும் சுமார் 75 ஆயிரம் முதல் 85 ஆயிரம்வரை சம்பளமாக இந்தப்படிப்பை முடித்தவர்களுக்கு ஆரம்ப நிலையில் வழங்கப்படுகிறது. இருந்தபோதும் அனுபவத்தின் அடிப்படையில் இவர்களது சம்பளம் ஆண்டுக்கு சுமார் 40 இலட்சம்வரை வழங்கப்பட வாய்ப்புகள் உள்ளது. இதுதவிர இந்தப்படிப்பை முடித்தவர்கள் சொந்தமாக தொழில் செய்யவும் வாய்ப்புகள் உள்ளன.

சி.எம்.ஏ.(CMA)படிப்பு

"காஸ்ட் அன்ட் மேனேஜ்மெண்ட் அக்கவுண்டன்ட்" படிப்பை "சி.எம்.ஏ. படிப்பு" என்றும் அழைப்பார்கள். இந்தப்படிப்பு மொத்தம் 3 பிரிவுகளாக நடத்தப்படுகிறது. அவை -

1.பவுண்டேன் கோர்ஸ் (Foundation Course)

2.இண்டர்மீடியட் கோர்ஸ் (Intermediate Course)

3.பைனல் கோர்ஸ் (Final Course)

-ஆகியவை ஆகும்.

1.பவுண்டேன் கோர்ஸ் (Foundation Course)

பத்தாம் வகுப்பில் வெற்றி பெற்றவர்கள் பவுண்டன் கோர்ஸ் படிக்க விண்ணப்பிக்கலாம். பிளஸ் 2 படிப்பை முடித்தவர்கள் இந்தத் தேர்வை எழுதலாம். பிளஸ் 2 படிப்பில் எந்தப்பிரிவை எடுத்துப் படித்து இருந்தாலும் பவுண்டேன் கோர்ஸ் எழுத தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

பவுண்டேன் கோர்ஸ் ஆண்டுதோறும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெறும். ஜூன் மாதம் இந்தத் தேர்வை எழுத விரும்புபவர்கள் அந்த ஆண்டு ஜனவரி 31ஆம் தேதிக்குள் தங்கள் பெயரை பதிவு செய்துகொள்ள வேண்டும். அதேபோல், டிசம்பர் மாதம் தேர்வு எழுத விரும்புபவர்கள் அந்த ஆண்டு ஜூலை 31ஆம் தேதிக்குள் தங்கள் பெயரை பதிவு செய்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.

குறைந்தபட்சம் தேர்வுக்கு 4 மாதங்களுக்குமுன்பே தங்கள் பெயரை முறைப்படி பதிவு செய்தவர்கள் மட்டுமே, தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். மாணவர் சேர்க்கை ஆன்லைன்மூலமும் நடைபெறும். மேலும் விவங்களுக்கு https://eicmai.in/studentportal/Home என்ற இணையதளத்தை தொடர்புகொள்ளலாம்.

2.இண்டர்மீடியட் கோர்ஸ் (Intermediate Course)

பட்டப்படிப்பை முடித்தவர்கள் இந்தத்தேர்வை எழுதலாம். பட்டப்படிப்பில் எந்த விருப்பப் பாடத்தை எடுத்துப் படித்திருந்தாலும், இந்தத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், நிகழ்த்து கலை (Performing Arts), இசை (Music) போன்ற பாடங்களில் பட்டப்படிப்பை முடித்தவர்கள் இந்தத் தேர்வை எழுத அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும், சி.எம்.ஏ. பவுண்டேன் கோர்ஸ் தேர்ச்சி பெற்றவர்கள் இந்தத்தேர்வு எழுத தகுதி படைத்தவர்கள் ஆவார்கள். இண்டர்மீடியட் கோர்ஸ் தேர்வு ஆண்டுதோறும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெறும். ஜூன் மாதம் இந்தத் தேர்வை எழுத விரும்புபவர்கள் அந்த ஆண்டு ஜனவரி 31ஆம் தேதிக்குள் தங்கள் பெயரை பதிவு செய்துகொள்ள வேண்டும். அதேபோல், டிசம்பர் மாதம் தேர்வு எழுத விரும்புபவர்கள் அந்த ஆண்டு ஜூலை 31ஆம் தேதிக்குள் தங்கள் பெயரை பதிவு செய்துகொள்ள வேண்டியது அவசியமாகும். இந்த கோர்ஸ் பற்றிய மேலும் விவங்களுக்கு https://eicmai.in/studentportal/Home என்ற இணையதளத்தை தொடர்புகொள்ளலாம்.

3.பைனல் கோர்ஸ் (Final Course)

பவுண்டேன் கோர்ஸ் மற்றும் இண்டர்மீடியட் கோர்ஸ் ஆகிய இரண்டு தேர்வுகளிலும் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே இறுதித்தேர்வு எழுத இயலும். இண்டர்மீடியட் கோர்ஸ் படிப்பின் Group I, Group II தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே பைனல் கோர்ஸ் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.

பைனல் கோர்ஸ் தேர்வு ஆண்டுதோறும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெறும். ஜூன் மாதம் இந்தத் தேர்வை எழுத விரும்புபவர்கள் அந்த ஆண்டு ஜனவரி 31ஆம் தேதிக்குள் தங்கள் பெயரை பதிவு செய்துகொள்ள வேண்டும். அதேபோல், டிசம்பர் மாதம் தேர்வு எழுத விரும்புபவர்கள் அந்த ஆண்டு ஜூலை 31ஆம் தேதிக்குள் தங்கள் பெயரை பதிவு செய்துகொள்ள வேண்டியது அவசியமாகும். பைனல் கோர்ஸ் பற்றிய மேலும் விவங்களுக்கு https://eicmai.in/studentportal/Home என்ற இணையதளத்தை தொடர்புகொள்ளலாம்.

தேர்வுத்திட்டம்

சி.எம்.ஏ. படிப்பின் தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் மதிப்பெண்கள் விவரங்களை சற்று விரி;வாகப் பார்ப்போம்.

1.பவுண்டேன் கோர்ஸ் (FOUNDATION COURSE)

தாள் 1 -வணிகச் சட்டங்கள் மற்றும் வணிகத் தொடர்புகளின் அடிப்படைகள் (FBLC)

தாள் 2 -நிதி மற்றும் செலவு கணக்கியலின் அடிப்படைகள் (FFCA)

தாள் 3 -வணிக கணிதம் மற்றும் புள்ளியியல் அடிப்படைகள் (FBMS)

தாள் 4 -வணிக பொருளாதாரம் மற்றும் மேலாண்மையின் அடிப்படைகள் (FBEM)

2.இண்டர்மீடியட் கோர்ஸ் (INTERMEDIATE COURSE)

குரூப் I

தாள் 5 -வணிகச் சட்டங்கள் மற்றும் நெறிமுறைகள் (BLE)

தாள் 6 -நிதிக் கணக்கியல் (FA)

தாள் 7- நேரடி மற்றும் மறைமுக வரிவிதிப்பு (DITX)

தாள் 8 -செலவு கணக்கியல் (CA)

குரூப் II

தாள் 9 -செயல்பாட்டு மேலாண்மை மற்றும் மூலோபாய மேலாண்மை (OMSM)

தாள் 10 -கார்ப்பரேட் கணக்கியல் மற்றும் தணிக்கை (CAA)

தாள் 11- நிதி மேலாண்மை மற்றும் வணிக தரவு பகுப்பாய்வு (FMDA)

தாள் 12 -மேலாண்மை கணக்கியல் (MA)

3.பைனல் கோர்ஸ் (FINAL COURSE)

குரூப் III

தாள் 13 கார்ப்பரேட் மற்றும் பொருளாதாரச் சட்டங்கள் (CEL)

தாள் 14-மூலோபாய நிதி மேலாண்மை (SFM)

தாள் 15- நேரடி வரிச் சட்டங்கள் மற்றும் சர்வதேச வரிவிதிப்பு (டிஐடி)

தாள் 16- ஸ்டேர்ட்டஜி செலவு மேலாண்மை (SCM)

குரூப் -IV

தாள் 17- செலவு மற்றும் மேலாண்மை தணிக்கை (CMAD)

தாள் 18 -கார்ப்பரேட் நிதி அறிக்கை (CFR)

தாள் 19 -மறைமுக வரி சட்டங்கள் மற்றும் நடைமுறை (ITLP)

விருப்பப் பாடங்கள் (ELECTIVES)

தாள் 20 A: உத்திசார் செயல்திறன் மேலாண்மை மற்றும் வணிக மதிப்பீடு (SPMBV)

B: வங்கி மற்றும் காப்பீட்டில் இடர் மேலாண்மை (RMBI)

C: தொழில்முனைவு மற்றும் தொடக்கம் (ENTS)

மேற்குறிப்பிட்ட அனைத்தும் 100 மதிப்பெண்களுக்கானது.

குறிப்பு : மேலே குறிப்பிடப்பட்டுள்ள 3 விருப்பப் பாடங்களில் ஏதேனும் ஒரு விருப்பப் பாடத்தை பைனல் கோர்ஸ் தேர்வு எழுத பெயர் பதிவு செய்யும்பொழுது கண்டிப்பாக தேர்ந்தெடுத்து குறிப்பிட்டு பெயர் பதிவு செய்ய வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு

தலைமை அலுவலக முகவரி:

CMA Bhawan,

12 Sudder Street,

Kolkata - 700 016,

Phone: 033-40364777/40364722/40364726.

டெல்லி அலுவலக முகவரி:

CMA Bhawan,

3 Institutional Area, Lodhi Road,

New Delhi - 110 003,

Phone: 011-24622156/24622157/24622158.

தென்மண்டல அலுவலக முகவரி:

Southern India Regional Council (SIRC)

CMA Bhawan, 4, Montieth Lane,

Egmore,Chennai - 600 008,

Phone: 9941299422/044-28554443/28554326

E-mail: sirc@icmai.in;

இவைதவிர www.icmai.in மற்றும் http://sircoficmai.in/ ஆகிய இணையதள முகவரியிலும் இந்தப்படிப்பு பற்றிய அனைத்து விவரங்களையும் தெரிந்துகொள்ளலாம்.


மேலும் செய்திகள்