< Back
கல்வி/வேலைவாய்ப்பு
  மத்திய அரசு சி.பி.எஸ்.இ கல்வி வாரியத்தில்  வேலை
கல்வி/வேலைவாய்ப்பு

  மத்திய அரசு சி.பி.எஸ்.இ கல்வி வாரியத்தில்  வேலை

தினத்தந்தி
|
2 Jan 2025 3:20 PM IST

  மத்திய அரசு சி.பி.எஸ்.இ கல்வி வாரியத்தில்  உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு சி.பி.எஸ்.இ கல்வி வாரியத்தில் உள்ள கண்காணிப்பாளர், இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன. இதற்கு தகுதியும் பணிஅனுபவமும்உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலிப்பணியிடங்கள்: 212

கண்காணிப்பாளர் - 142

இளநிலை உதவியாளர் - 70

கல்வி தகுதி:

இளநிலை உதவியாளர்: 12-ம் வகுப்பில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கண்காணிப்பாளர் : ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

கண்காணிப்பாளர்- 30 வயது

இளநிலை உதவியாளர்- 27 வயது

வயது தளர்வு :

ஓபிசி(OBC) - 3 ஆண்டுகள்

எஸ்சி/எஸ்டி(SC/ST) - 5 ஆண்டுகள்

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு, நேர்காணல்

விண்னப்பிக்கும் முறை:https://www.cbse.gov.in/cbsenew/recruitment.html ஆண்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்:

ரூ.800 ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி. (SC/ST) பெண்கள், மாற்றுத்திறனாளி பிரிவினர் விண்ணப்பக்கட்டணம் ஆன்லைனில் செலுத்த தேவையில்லை.

மேலும் விவரங்களுக்கு: https://www.cbse.gov.in/

விண்ணப்பத்திற்கான கடைசி தேதி:31.01.2025

இது குறித்து கூடுதல் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்