< Back
கல்வி/வேலைவாய்ப்பு
ஐடிபிஐ வங்கியில் உதவி மேலாளர் பணி
கல்வி/வேலைவாய்ப்பு

ஐடிபிஐ வங்கியில் உதவி மேலாளர் பணி

தினத்தந்தி
|
28 Nov 2024 4:57 PM IST

ஐடிபிஐ வங்கியில் காலியாக உள்ள உதவி மேலாளர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஐடிபிஐ வங்கியில் காலியாக உள்ள 600 உதவி மேலாளர் கிரேடு 'கிரேடு 'O' - பொது'&கிரேடு 'O'- நிபுணர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

காலியிடங்கள்: 600

கல்வி தகுதி:

ஜேஏஎம்(JAM) கிரேடு 'O' - பொது-ஏதேனும் ஒரு பாடபிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஜேஏஎம்(JAM) கிரேடு 'O'- நிபுணர் - விவசாய சொத்து அதிகாரி (AAO)-வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், மீன்வள அறிவியல் ஆகியவற்றில் நான்கு ஆண்டு பட்டம் (B.Sc/B Tech அல்லது BE)பெற்றிருக்க வேண்டும்.

பணி: உதவி மேலாளர்(Assistant Manager)

வயது வரம்பு: குறைந்தபட்சம்: 20 ஆண்டுகள்; அதிகபட்சம்: 25 ஆண்டுகள்

வயது தளர்வு:

எஸ்.சி/எஸ்.டி(SC/ST) - 5 ஆண்டுகள்

ஓபிசி(OBC )- 3 ஆண்டுகள்

விண்ணப்பகட்டணம்:

எஸ்.சி/எஸ்.டி( SC/ST)- ரூ.250/- மட்டுமே

மற்ற அனைத்து விண்ணப்பதார்கள் -ரூ.1050 செலுத்த வேண்டும்

தேர்வு முறை:

ஆன்லைன் தேர்வு / சான்றிதழ் சரிபார்ப்பு

தனிப்பட்ட நேர்காணல்/ மருத்துவ சோதனை

விண்ணப்பிக்கும் முறை: https://www.idbibank.in/ என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்திற்கான தொடக்க தேதி21.11.2024

விண்ணப்பத்திற்கான இறுதி தேதி30.11.2024

மேலும் செய்திகள்