< Back
கல்வி/வேலைவாய்ப்பு
10ம் வகுப்பு முடித்தவர்களா நீங்கள்......இதோ 39,481 கான்ஸ்டபிள் பணியிடங்கள்!
கல்வி/வேலைவாய்ப்பு

10ம் வகுப்பு முடித்தவர்களா நீங்கள்......இதோ 39,481 கான்ஸ்டபிள் பணியிடங்கள்!

தினத்தந்தி
|
22 Sept 2024 8:30 AM IST

பணியாளர் தேர்வு ஆணையம் ( SSC) ஆண்டுதோறும் பல்வேறு விதமான காலிபணியிடங்களை கல்வி தகுதிக்கு ஏற்றார்போல் வெளியிட்டு ஆட்களை தேர்வு செய்து வருகிறது.

சென்னை,

பணியாளர் தேர்வு ஆணையம் ( SSC) ஆண்டுதோறும் பல்வேறு விதமான காலிபணியிடங்களை கல்வி தகுதிக்கு ஏற்றார்போல் வெளியிட்டு ஆட்களை தேர்வு செய்து வருகிறது. அதன்படி, தற்போது 10ம்- வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான கான்ஸ்டபிள் (பொதுப் பணி) க்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நிறுவனத்தின் பெயர்: பணியாளர் தேர்வு ஆணையம் ( SSC)

மொத்த பணியிடங்கள்: 39,481

பணி விவரம்: மத்திய ஆயுதக் காவல் படைகளில் (CAPFs) கான்ஸ்டபிள் (பொதுப் பணி) மற்றும் SSF, ரைபிள்மேன் (பொதுப் பணி) அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் மற்றும் சிப்பாய் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத் தேர்வு

கல்வி தகுதி: மெட்ரிகுலேஷன் அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர் 18-23 வயதுடையவராக இருக்க வேண்டும் (அதாவது, 02.01.2002 க்கு முன் பிறக்காதவர்கள் மற்றும் 01.01.2007க்கு பின் பிறக்காதவர்கள்)

தேர்வு முறை: கணிணி வழி எழுத்து தேர்வு, உடல் தரநிலைத் தேர்வு (PST), உடல் திறன் தேர்வு (PET), விரிவான மருத்துவப் பரிசோதனை (DME), மறுபரிசீலனை மருத்துவப் பரிசோதனை (RME) மற்றும் ஆவணச் சரிபார்ப்பு (DV) மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

தேர்வு மொழி: தமிழ், ஆங்கிலம், ஹிந்தி

தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள் : சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர் & புதுச்சேரி

விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.10.2024

விண்ணப்ப அறிவிப்பினை தெரிந்து கொள்ள: https://ssc.gov.in/

மேலும் செய்திகள்