< Back
வணிகம்
வாரத்திற்கு 6 நாட்கள் வேலை;  இன்போசிஸ் நாராயணமூர்த்தி விடாப்பிடி
வணிகம்

வாரத்திற்கு 6 நாட்கள் வேலை; இன்போசிஸ் நாராயணமூர்த்தி விடாப்பிடி

தினத்தந்தி
|
15 Nov 2024 2:00 PM IST

வாரத்திற்கு 6 நாட்கள் வேலை முக்கியம் என்ற தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக நாராயண மூர்த்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இன்போசிஸ் நிறுவனர்களில் ஒருவரான நாராயணமூர்த்தி கூறியதாவது;- தேசத்தின் முன்னேற்றத்துக்கு கடினமாக உழைக்க வேண்டியது அவசியம். அந்த அயராத கடின உழைப்புக்கு முன்மாதிரியாக பிரதமர் மோடி உள்ளார்.

நாட்டில் வலுவான பணி சார்ந்த நெறிமுறை இல்லாமல் நம்மால் உலக நாடுகளுடன் வளர்ச்சி சார்ந்து போட்டியிட முடியாது. இந்தியாவின் வளர்ச்சி நம் முயற்சியில்தான் உள்ளது. வாரத்துக்கு 6 நாட்கள் வேலை அவசியம் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். அந்த கருத்தை என்னுடைய கல்லறை வரை கொண்டு செல்வேன், ஒருபோதும் மாற்றிக் கொள்ளபோவதில்லை" என்றார்.

கடந்த ஆண்டு நாராயண மூர்த்தி பணி நேரம் குறித்து முன்வைத்த கருத்து பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. நாராயணமூர்த்தி கூறும் போது," நாட்டின் இளைஞர்களுக்கு நான் சொல்வதெல்லாம் நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம் என அடுத்த 20 - 50 ஆண்டுகள் வரை உழைக்க வேண்டும். அப்போதுதான் ஜிடிபி-யில் முதல் அல்லது இரண்டாவது இடத்தில் இந்தியாவால் இருக்க முடியும்"என்று கூறியிருந்தார்.

மேலும் செய்திகள்